YouTurn

இந்து முன்னணியின் போலியான வாக்கு பக்கம் அம்பலம்!

இந்து முன்னணியின் போலியான வாக்கு பக்கம் அம்பலம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

எந்த பெயர் வேண்டுமானலும், இருக்கும் தொலைப்பேசி எண்ணை எத்தனை முறை மாற்றி போட்டாலும் இதில் வாக்களிக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வாக்கெடுப்பு பக்கம் போலியானது என்பது உறுதியானது.

பரவிய செய்தி

நீதிமன்ற உத்தரவின் படி

திருப்பரங்குன்றம்

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலைதள வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில்

1.20 லட்சம் பேர் ஆதரவாக வாக்களித்து

மக்கள் தங்கள் அமோக ஆதரவை தெரிவித்துள்ளனர்.

link; https://hindumunnani.org/poll/ 


Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் தீபத்தூணில் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காக்கு அருகில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி கொள்ளலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுக் கொடுத்தும், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதகலவரம் ஏற்படும் என்ற நோக்கில் அங்கு யாரையும் விடவில்லை. இதற்காக இந்து முன்னணியினரும், பாஜகவை சேர்ந்தவர்களும் தொடர் பிரச்னையிலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் இந்து முன்னணியின் பேஸ்புக் பக்கத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலைதள வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதில் 1.20 லட்சம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளதாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. 


உண்மை என்ன? 

முதலில் பதிவில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது ”திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் எனும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டு, அந்த பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் பெயர், தொலைபேசி எண், மாவட்டம் ஆகியவை கேட்கப்பட்டிருந்தது. பிறகு, நீங்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்கிறீர்களா? என்று குறிப்பிட்டு, ஆம் - நான் ஆதரிக்கிறேன்,  இல்லை - நான் ஆதரிக்கவில்லை என இரண்டு விருப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. 

 


முதலில் அதில் பெயரில் Captain America என்றும், 0123456789 என்ற தொலைபேசி எண்ணும், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றும் கொடுத்துவிட்டு,  ஆம் - நான் ஆதரிக்கிறேன் என்ற பதில் அளித்தோம். அப்போது இந்த தொலைபேசி எண்ணிலிருந்து ஏற்கனவே ஒரு கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்தது. 


சரி, இதை தவறாக எடுத்துக் கொண்டது என்று எண்ணி மீண்டும் அதே போல், 1111111111 என்று வேறு எண்ணை பதிவிட்டு முயற்சி செய்தோம். அப்போதும் இந்த தொலைபேசி எண்ணிலிருந்து ஏற்கனவே ஒரு கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்தது. உலகிலேயே இல்லாத ஒரு தொலைப்பேசி எண்ணில் இருந்து எப்படி கருத்து பதிவிட முடியும் என்ற சந்தேகம் எழுந்தது. 


இதையடுத்து மீண்டும் அதில் பெயர் Hulk என்று குறிப்பிட்டு, 3567438432 என்ற செல்லாத தொலைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு, இல்லை - நான் ஆதரிக்கவில்லை என்ற பதில் அளித்தோம். உடனடியாக உங்கள் கருத்து வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று வந்தது.


முடிவு: 

எனவே, எந்த பெயர் வேண்டுமானலும், இருக்கும் தொலைப்பேசி எண்ணை எத்தனை முறை மாற்றி போட்டாலும் இதில் வாக்களிக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வாக்கெடுப்பு பக்கம் போலியானது என்பது உறுதியானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க