YouTurn

இந்தியாவின் 'ஏவுகணை சோதனை முயற்சி' எனப் பரவும் தவறான காணொளிகள்!

இந்தியாவின் 'ஏவுகணை சோதனை முயற்சி' எனப் பரவும் தவறான காணொளிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை என்று கூறி பரவும் வீடியோ, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்டது. இதே போன்று இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகை எனப் பரவும் வீடியோவும், 3D Animation மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையின் கர்ஜனை அருகில் இருந்து.. இந்தியா தயார் ஆகி விட்டது.. 


X Link | Archive Link


பரவிய செய்தி 2: 


Spartans!  இந்தியா தற்போது.  Demo டெஸ்ட். எப்படி இருக்கு மக்களே அங்க அடிக்கிற அடில சீமான் திருமா இங்க கதறணும். அப்பன் முருகன் வேல் போகுது..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள பைசாரன் பள்ளாத்தாக்கிலுள்ள சுற்றுலாத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சமீபத்தில் ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது.


இந்நிலையில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை மற்றும் இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகையைப் பாருங்கள் என்று கூறி இரண்டு காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


#IndianArmy #AkashMissile #DefencePower #MakeInIndia #BharatShakti #IndianAirForce #MissileDefence #IndiaFirst #VandeMataram #AtmanirbharBharat pic.twitter.com/oDnvN1zR8o

— இந்திய தேசிய இராணுவம் | Indian National Army (@NethajiSoldiers) February 12, 2025



உண்மை என்ன? 


தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை என்று கூறி பரவும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 


#IndianArmy #AkashMissile #DefencePower #MakeInIndia #BharatShakti #IndianAirForce #MissileDefence #IndiaFirst #VandeMataram #AtmanirbharBharat pic.twitter.com/oDnvN1zR8o

— இந்திய தேசிய இராணுவம் | Indian National Army (@NethajiSoldiers) February 12, 2025


எனவே இது குறித்த ஆய்வைத் தொடங்கினோம். பிப்ரவரி 12, 2025 அன்றே இந்த வீடியோ “RT Hindi” போன்ற ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் உள்ள ஆகாஷ் ஏவுகணை, வானில் உள்ள விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வகையில் DRDO ஆல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் அறிய முடிந்தது.



பரவி வரும் இந்த வீடியோ பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு எடுக்கப்பட்டதல்ல. அதற்கு முன்பே கடந்த பிப்ரவரி 12 அன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. 


இதே போன்று, இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகை எனக் கூறி பரவி வரும் வீடியோவையும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். 


Kuntal Biswas” என்ற எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ ஏப்ரல் 24, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. வீடியோவை ஆய்வு செய்ததில் இது 3D Animation மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது உறுதியானது. 



Kuntal Biswas” தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்களை இதே போன்று 3D Animation மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கி பதிவு செய்திருந்தார்.



இதன் மூலம், இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகை எனப் பரப்பப்படும் வீடியோ உண்மையானது அல்ல என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில்,  தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை என்று கூறி பரவும் வீடியோ, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகை எனப் பரவும் வீடியோ, 3D Animation மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க