யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ் கார்டில், “நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்” என்றே கூறப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு அறிவில்லையாம்
வட நாட்டுக்காரர்கள் அறிவாளியாம்
பாஜக நயினார் சொல்றான்
ஏன்டா நாயே அறிவுள்ளவன் எதுக்குடா
அறிவில்லாத தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வர்றான்

விரிவான விளக்கம்
வடமாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதற்காக நீட்டை ரத்து செய்யமுடியாது என்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து
செய்யப்படுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்ததாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு அறிவில்லையாம்
வட நாட்டுக்காரர்கள் அறிவாளியாம்
பாஜக நயினார் சொல்றான்
ஏன்டா நாயே அறிவுள்ளவன் எதுக்குடா
அறிவில்லாத தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வர்றான்
@ pic.twitter.com/dmMgNaqiWG
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து புதிய தலைமுறை ஊடகத்தை தொடர்புக் கொண்ட போது, இது போன்ற எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்தனர்.
மேலும் keywords கொண்டு இணையத்தில் தேடிய போதும், நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்டில், 08-04-2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பத்தி புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்துத் தேடினோம். அதில் இதுபோன்ற NewsCard ஒன்று ஏப்ரல் 08, 2026 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலின் முடிவாக, வடமாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதற்காக நீட்டை ரத்து செய்யமுடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக பரப்பப்படும் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் NewsCard போலியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.