YouTurn

உத்திர பிரதேச பேருந்து நிலையம் என்று பரவும் சீனாவின் ரயில் நிலைய வீடியோ!

உத்திர பிரதேச பேருந்து நிலையம் என்று பரவும் சீனாவின் ரயில் நிலைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீனாவில் உள்ள இரயில் நிலையத்தை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று தவறாக பரப்புகிறார்கள். சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரத்தில் உள்ள இரயில் நிலையம் இது. இதுதான் உலகிலே மிகப் பெரிய இரயில் நிலையம் என்று சொல்லப்படுகிறது.

பரவிய செய்தி

இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி

இந்தியா பூராவும் இவரை போன்ற ஸ்வாமிகளின் காலடியில் கிடத்தினால், ராஜ்ய பரிபாலனம் மிளிர, சனாதனம் செழிக்க வாழலாம்.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பேருந்து நிலையம் என்றுக் கூறி 13 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தான் கட்டமைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். Comment with Lucia என்ற யூடியூப் பக்கத்தில், ஜூலை 21, 2025 அன்று “The world’s largest high-speed train station is in China. Chongqing East Railway Station” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, Barrett என்ற யூடியூப் பக்கத்தில் “The BIGGEST Train Station in the World here in China“ என்ற தலைப்பில் இதே வீடியோ பதிவாகியிருந்தது. அதில் பேசும் ஒரு நபர் இது ரயில் நிலையம் என்றும், இதன் கட்டுமான பணி 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கி, ஜூன் 27, 2025 அன்று முடிவடைந்ததாக கூறுகிறார். மேலும் இதுதான் உலகிலே மிகப் பெரிய இரயில் நிலையம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பரவி வரும் வீடியோ சீனாவில் உள்ள ரயில் நிலையம் என்பது உறுதியானது. 


இதை மேலும் உறுதி செய்ய Chongqing East Railway Station என்று கூகுளில் தேடிய போது, பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. 

image.png


முடிவு: 

எனவே, இது சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரத்தில் உள்ள இரயில் நிலையமாகும். இதை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க