YouTurn

மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!

மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையான வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மிகவும் வேதனை தரும் காட்சி பார்க்கவே முடியவில்லை கொடூரமனம் படைத்த ஈன்பிறவிகளே நல்ல சாவு வருமாடா உங்களுக்கு? நீங்கெல்லாம் புழுத்து நாறித்தான்டா சாவீங்க.

X Link | Archived Link

விரிவான விளக்கம்

மாட்டிறைச்சி கடையில் ஒரு பசு மாடு வெட்டப்பட்டு இருப்பதை கண்டு, மற்றொரு மாடு வந்து வேதனையுடன் பார்ப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் லென்ஸ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வைரலாகி வருவதை காணமுடிந்தது. ஆனால் இந்த வீடியோ உண்மையா என்பதை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 


இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவின் screenshotகளை 'Was It AI'  இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ,  AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : ‘விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!


நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!


முடிவு: 

எனவே, பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையான வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க