YouTurn

அமித்ஷாவின் காலணியை துடைத்த ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!

அமித்ஷாவின் காலணியை துடைத்த  ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை துடைத்த பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர் நவிகா’ என்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. பீகார் பிரச்சாரத்தின் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, AI தொழில்நுட்பத்தின் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

தேர்தல். பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட

உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிரசாரத்திற்காண.!

வாகன பயணத்தின்போது

ஒரு பெண்ணிடம் தனது

காலணிகளை காட்டி துடைக்க

செல்கிறார்,

நாட்டிலுள்ள வாக்களிக்காளர்கள்

அனைவரும், இம்மாதிரியான

பாஜக தலைவர்களுக்கு

பாடம் புகட்டுங்கள்

இந்த வீடியோ நாட்டுமக்கள்

அனைவருக்கும் சமர்ப்பணம்

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர்  நவிகா குமார் துடைப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 


உண்மை என்ன? 

அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரப்பப்பட்டும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் சில இடங்களில் அமித் ஷாவின் முகம் மாறுபடுவதை காண முடிந்தது.


இதையடுத்து இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது நவிகா குமார் தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 3 அன்று, அமித்ஷா அருகிலிருந்து நவிகா குமார் எடுத்திருந்த செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை எடுத்து தான் ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 


இதை உறுதிச் செய்ய, பரவி வரும் வீடியோவை decopy.ai என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆய்வு செய்தோம். அப்போது இது 100% ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. 


முடிவு: 

எனவே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை துடைத்த பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர் நவிகா’ என்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. பீகார் பிரச்சாரத்தின் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, AI தொழில்நுட்பத்தின் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க