யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எம்பி அருண் நேரு டெல்லியில் நேரில் சந்தித்தது உண்மையே. ஆனால் நிர்மலா சீதாராமனின் காலில் அவர் விழுந்து வணங்குவது போன்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. “Grok” AI tool பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனில் காலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினரான அருண் நேரு விழுந்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு சந்தித்தது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Nirmala Sitharaman Office-ன் எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 09 அன்று, நாடாளுமன்ற வளாகத்தில் நிர்மலா சிதாராமனை திமுக எம்.பி அருண் நேரு சந்திக்கிறார் என்று குறிப்பிட்டு, ஒன்றிய அமைச்சர் அருகில் அவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது.
Shri Arun Nehru (@ArunNehru_DMK), Hon'ble MP (LS), calls on Smt @nsitharaman at Parliament House. pic.twitter.com/dCtqwf6Uz2
இதையடுத்து பரவி வரும் வீடியோவில், Create your own with Grok என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை எடுத்து தான் ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதை மேலும் உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 92.8% இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசு தலைவர் என்று பரவும் AI வீடியோ!
அமித்ஷாவின் காலணியை துடைத்த ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
எனவே, நம் தேடலில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எம்பி அருண் நேரு டெல்லியில் நேரில் சந்தித்தது உண்மையே. ஆனால் நிர்மலா சீதாராமனின் காலில் அவர் விழுந்து வணங்குவது போன்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. “Grok” AI tool பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது.
