YouTurn

பிரதமர் மோடியிடம் இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பினாரா?

பிரதமர் மோடியிடம் இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பினாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“காஷ்மீர் -ராஜஸ்தானில் உள்ள எல்லையோர பகுதிகளை பாகிஸ்தானிடம் ஏன் இழந்தோம்” என நடிகை ஐஸ்வர்யா ராய் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியதாகப் பரவும் வீடியோ, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இது குறித்து எந்த கருத்துகளையும் அவர் தெரிவிக்கவில்லை.

பரவிய செய்தி

எதனால் ஆறு விமானங்களை இழந்தோம்?

எதனால் 4 ரபேல் விமானங்களை இழந்தோம்?

எதனால் இரண்டு எஸ் 400 சிஸ்டத்தை இழந்தோம்?

எதனால் 300 இந்திய ராணுவ வீரர்களை இழந்தோம்?

காஷ்மீர் -ராஜஸ்தானில் உள்ள எல்லையோர பகுதிகள்

பாகிஸ்தானிடம் இழந்தோம்?

இந்த கேள்விகளுக்கு எந்த தேசபக்தனாவது பதில் சொல்வானுங்களா?

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நவம்பர் 18 அன்று சாய்பாபா நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சச்சின் தெண்டுல்கர், நடிகர் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



உண்மை என்ன? 

சாய்பாபா நூற்றாண்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பேசியது குறித்த முழு வீடியோ இருக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”Actress Aishwarya Rai joins PM Modi, speaks at centenary celebrations of Sri Sathya Sai Baba in AP” என்ற தலைப்பில் ANI யூடியூப் பக்கத்தில் இது குறித்த முழு வீடியோவையும் பார்க்கமுடிந்தது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யா ராய் பேசி இருந்தார். ஆனால் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட எந்த கருத்தையும் அவர் பேசி இருக்கவில்லை.


தொடர்ந்து தேடுகையில் டிடி நியூஸ் யூடியூப் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி முழுவதையும் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதிலும் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருந்த கருத்தை அவர் பேசி இருக்கவில்லை.


இதையடுத்து  பரவி வரும் வீடியோவை கூர்ந்து பார்க்கையில், ஐஸ்வர்யா ராயின் அசைவுகள், வாயசைவுகள் இயல்பானதாக இல்லாமல் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் அவர் அணிந்திருந்த மோதிரம் மறைந்து, பின்பு தோன்றுவதை காண முடிந்தது.

இதை வைத்து பரவி வரும் அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் RESEMBLE AI இணையதளத்தில் பரவி வரும் வீடியோவில் ஐஸ்வர்யா ராய் பேசிய ஆடியோவை மட்டும் பதிவிட்டு பார்த்தோம். அப்போது 90% ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்யமுடிந்தது. 


முடிவு: 

எனவே, “காஷ்மீர் -ராஜஸ்தானில் உள்ள எல்லையோர பகுதிகளை பாகிஸ்தானிடம் ஏன் இழந்தோம்” என நடிகை ஐஸ்வர்யா ராய் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியதாகப் பரவும் வீடியோ, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இது குறித்து எந்த கருத்துகளையும் அவர் தெரிவிக்கவில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க