YouTurn

அனுமான் சிலைக்கு பூஜை செய்த எம்.பி அசாதுதீன் ஓவைசி என்று பரவும் ஏஐ புகைப்படம்!

அனுமான் சிலைக்கு பூஜை செய்த எம்.பி அசாதுதீன் ஓவைசி என்று பரவும் ஏஐ புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘இந்துக் கடவுளான ஹனுமானுக்கு தீபாராதனை காட்டும் எம்பி அசாதுதீன் ஓவைசி’ எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. வீடியோவில் “Gemini AI” லோகோ இடம்பெற்றிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.

பரவிய செய்தி

இன்டா நடக்குது இந்தியாவுல

இந்துக்கள் ஓட்டுக்காக

ஓவைசி

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

AIMIM தலைவரும். ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, கோயிலில் அனுமான் சிலைக்கு பூஜை செய்வது போன்ற காணொளி  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 



உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது இது குறித்து எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. 


இதையடுத்து அந்த வீடியோவை கூர்ந்து கவனிக்கையில், அந்த வீடியோவின் இறுதியில் “Gemini AI” லோகோ இடம்பெற்றிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. மேலும், வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ள மக்களின் முகபாவனைகளும் மாறாமல் உள்ளன.


இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவின் screenshotகளை Decopy. ai என்ற இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, 96% AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது.  


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ! 


மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!


முடிவு:

நம் தேடலில், ‘இந்துக் கடவுளான ஹனுமானுக்கு தீபாராதனை காட்டும் எம்பி அசாதுதீன் ஓவைசி’ எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க