YouTurn

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால் தலை என்று பரவும் AI புகைப்படம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால் தலை என்று பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

பரவிய செய்தி

கேப்டன் விஜயகாந்த் தபால் தலை வெளியிடப்பட்டது 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தபால் தலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்டதாக பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


உண்மை என்ன? 

தேமுதிக நிறுவனரும் நடிகருமான மறைந்த விஜயகாந்தின் தபால் தலை வெளியிடப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாகச் செய்தி இல்லை. மேலும் தபால் தலையில் இந்தியா என்று எங்கும் எழுதப்படவில்லை. அதே போல் தபால் தலை எவ்வளவு விலை என்பதும் குறிப்பிடப்படவில்லை. 


இதையடுத்து Stamps Of India இணையதளப்பக்கத்தில், 1947 முதல் 2025 வரை வெளியான தபால் தலைகளை பார்த்த போது, மறைந்த விஜயகாந்தின் தபால் தலை வெளியானது குறித்து எந்த தகவலும் இல்லை. 

image.png


அதே போல் Postage Stamps இணையதளப்பக்கத்திலும் 2026ஆம் ஆண்டு வெளியான தபால் தலைகளை தேடிப் பார்த்தோம். அங்கும் விஜய்காந்திற்கு தபால் தலை வெளியிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 


இதை உறுதி செய்ய பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் புகைப்படம், 99.7% இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது. 


முடிவு: 

நம் தேடலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க