YouTurn

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் AI புகைப்படம்!

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் தாள்களை குடியரசு தின விழாவில் வெளியிட்டனர் |இப்பதான் முழு சுதந்திரம் அடைந்தது போல உள்ளது

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழாவில்  நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடியும், ஜனாதிபதி திரௌபதி முர்முவும் வெளியிட்டனர் என்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் தகவல் குறித்து தேடினோம். அப்போது BBC News Tamil ஊடகத்தில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தின அணிவகுப்பு குறித்த முழு வீடியோவும் இடம்பெற்றிருந்தது. 2:22:00 மணிநேரம் கொண்ட அந்த காணொளியை முழுவதுமாக பார்த்த போது, இப்படியான எந்த நிகழ்வும் நடந்ததாக இடம்பெறவில்லை. 


மேலும் Reserve Bank of India-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேதாஜி உருவம் பொறித்த ரூ.500 நோட்டுகள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்படி புதிதாக எந்த ரூ.500 நோட்டுகளும் வெளியாகவில்லை. 


இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தில் Tamil Cinema Fans Channel என்ற லோகோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்து. அந்த பக்கத்தை தேடிப் பார்த்தோம். அப்போது இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த பக்கத்தில், ஜனவரி 26 அன்று அதே புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் இது AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை படம் என்றும், இது உண்மையான அரசு அறிவிப்பு அல்ல எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதை மேலும் உறுதி செய்ய பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் புகைப்படம், 99.9% இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது. 

image.png


முடிவு: 

எனவே, நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் நோட்டு குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க