YouTurn

போலி செய்திகளை பரப்புவதில் புதிய உச்சத்தை தொட்ட Virtual Warriors!

இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.

போலி செய்திகளை பரப்புவதில் புதிய உச்சத்தை தொட்ட Virtual Warriors!

ஆங்கிலத்தில் ‘Unprecedented’ என்றொரு சொல் உண்டு. அதற்கு ’இதுவரை நிகழ்ந்திராத ஒன்று’ என்று பொருள். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் செய்தி ஊடகங்களின் பெயரை மாற்றி போலியான வலைத்தள கணக்குகளை தொடங்கி, அவற்றில் தாங்கள் எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குறித்து அவதூறு பரப்பப்படும் நிகழ்விற்கு இந்த ‘Unprecedented’ என்ற ஆங்கிலச் சொல் கணக்கச்சிதமாக பொருந்தும்.


சமூக ஊடகங்கள் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த நாட்களிலிருந்தே போலி கணக்குகள் அல்லது போலி பக்கங்கள் (Fake Accounts) தொடங்கி அதில் பதிவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் இப்போது நடந்திருப்பது இணைய சமூக இதுவரை கண்டிராத ஒன்றாகும்.



பிரபலமாக வெகுஜன ஊடகங்களின் பெயரை புனைந்து போலியாக பல கணக்குகளை உருவாக்கி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது, அடுக்கடுக்கான அவதூறுகளையும் பொய் செய்திகளையும் பரப்பி வருகிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல ஒரு டஜனுக்கும் மேலான (more than 12) போலி கணக்குகள் மூலம் இந்த அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இவை அனைத்தும் தவெக ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது அல்லது பரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும். 



இந்த போலி பக்கங்களில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைவது, காங்கிரஸ் கட்சியில் செல்வப்பெருந்தகை மாணிக்க தாகூர் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள், விசிக-விற்கான தொகுதி பங்கீடு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கிராமத்தில் நடந்த படுகொலை ஆகியவை குறித்து அவதூறான பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.





‘News 7 தமிழ்நாடு’, ‘சன் நீயூஸ்’, ‘தந்தி டிவி’, ‘News தமிழ்’ போன்ற பிரபலமான ஊடகங்களில் ‘Logo’வை Edit செய்து அதற்கு ’சன்னி நீயூஸ்’, ‘தத்தி டிவி’, ‘News 69’, ‘கொலைஞர் செய்திகள்’ என்ற புனைவான பெயரை வைத்து போலி கணக்குகளை தொடங்கியுள்ளனர். இதுபோக, ’Moon News’, ’Mars News’, ’சுடலை நீயூஸ்’ போன்ற பெயர்களிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய இந்த பெயர்களில் சில ஆபாசமானதாகவும், சில தனிநபர் ஒருவரின் மாண்பை குழைக்கும் விதத்தில் இருப்பதையும் காணமுடியும். 



இதில் பொதுவில் சொல்லமுடியாத எழுத முடியாத அளவிற்கு ஆபாசமான போலிக் கணக்குகளை நாம் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறோம். இவற்றில் சில சாதியை வன்மத்துடன் எழுதப்பட்ட போலிச் செய்திகளையும் பரப்பி வருகிறார். விசிக கட்சிக்கு பொதுத் தொகுதி வேண்டுமென்று திருமாவளவன் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுத்ததாகவும் பொய் செய்தி பரப்பப்படுகிறது. 



ஊடகவிலாளர்கள் நக்கீரன் கோபாலை ஆபாசமான வார்த்தைகளை குறிப்பிட்டு போலியான News Card ஒன்றையும் பரப்புகிறார்கள். சன் நீயூஸ் தலைமை ஆசிரியர் குணசேகரன் பாலியல் வழக்கில் சிக்கியிருப்பதாகவும், அவருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளதாகவும் பொய் செய்தி பரப்பப்படுகிறது.






முதல்வர் ஸ்டாலின் வயோதிகம் காரணமாக காரில் ஏறுவதற்கு சிரமப்படும் வீடியோவைக் கூட ’போதையில் தள்ளாடும் ஸ்டாலின்’ என்று தவறாக பரப்பிவருகிறார்கள்.


இவ்வாறு செய்தி ஊடகங்களின் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கியது, அதில் ஊடகவிலாளர்கள் மிக மோசமான வகையில் அவதூறுகள் பரப்பியது ஆகிவற்றை கண்டித்து ‘சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக கட்சியினர் தான் இவ்வாறு போலி பக்கங்களில் அவதூறு பரப்புகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



இந்த போலி கணக்குகளில் சில ஏற்கனவே Delete அல்லது Suspend செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இன்னும் பல போலிக் கணக்குகள் இன்றும் பொய் செய்திகளை பரப்பி வருகிறது. அவர்களில் சிலர் இவ்வாறு போலி கணக்குகளை உருவாக்கி பொய் செய்திகளை பரப்புவதை பெருமையானது (மாஸானது) என்று கருதி சமூக வலைத்தளங்களில் சிலாகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை