YouTurn

கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்த 1000 ரூ வழங்கக் கோரி டெல்லியில் பெண்கள் நடத்தியது பாஜகவின் நாடகப் போராட்டமா?

கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்த 1000 ரூ வழங்கக் கோரி டெல்லியில் பெண்கள் நடத்தியது பாஜகவின் நாடகப் போராட்டமா?
டெல்லி சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது தமிழ்நாட்டை பின்பற்றி டெல்லியிலும் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால்  அறிவிக்கப்பட்டது.

மேலும் டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21, 2024 அன்று இரவு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவதாக அறிவித்தும் இன்னும் பணம் வழங்கப்படாததைக் கண்டித்து டெல்லி நிதியமைச்சர் அதிஷி மர்லினாவின் இல்லத்திற்கு முன்பாக ஜூன் 11 அன்று பெண்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையால் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



சிலர் எதிர்க்கட்சிகள் பணத்தை பெற்று மக்களிடம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்று கூறியும் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதைக் காண முடிகிறது.



டெல்லியில் பெண்கள் நடத்தியது பாஜகவின் நாடகப் போராட்டமா?

போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, "டெல்லி மக்கள் கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். முதல்வர் ரூ.1000 தருவதாக வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான் தேர்தல் நடத்தப்பட உள்ள சூழலில் அவர் பெயரில் உள்ள சில வாக்குகளை அங்கும் இங்கும் பறிக்கவே இதுபோன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். மேலும் பாஜகவின் மகளிர் பிரிவுதான் போராட்டம் நடத்தியது. இது பாஜகவின் அவநம்பிக்கையையே காட்டுகிறது" என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.



இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலரும் பாஜகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிந்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த மகளிர் பிரிவினர், ஏன் தங்களது கட்சி அடையாளங்களை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டும் என்ற கேள்வியும் ஆழமாக எழுகிறது?



மேலும் போராட்டம் முடிந்தபின் இவர்கள் ஏன் கூட்டாக சேர்ந்து மெக்டொனால்டில் சந்தித்தார்கள் என்பதிலும் சந்தேகம் எழாமல் இல்லை.



இதற்கு முன்பும் மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் திரிணாமுல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டதாக பாஜக தலைவா் ஒருவா் கூறுவதுபோன்ற காணொளி கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.



 

ஆதாரங்கள்:

New video claims 70 women received money to take part in Sandeshkhali protest




















பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை