யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கடந்த 10 நாட்களாக, சில மிக நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.
முதல் நல்ல விஷயம். உலக வங்கி, நமது மோடியின் “க்ளீன் இந்தியா” என்னும் சுத்தமான இந்தியா திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார் 100 கோடி ரூபாய்) தன் பங்காகக் கொடுத்துள்ளது.

விரிவான விளக்கம்
கடந்த 10 நாட்களில் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்தும் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என்ற தகவல் பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
வெளிவராத செய்தி எனப் பரவும் பதிவில் முதல் தகவலாக, ”உலக வங்கி, நமது மோடியின் “க்ளீன் இந்தியா” என்னும் சுத்தமான இந்தியா திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார் 100 கோடி ரூபாய்) தன் பங்காகக் கொடுத்துள்ளது” என்று உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர் கடன் உதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக 2015, டிசம்பர் 15ம் தேதி அவர்களது அதிகாரப்பூர்வத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த நாள் ‘இந்து தமிழ் திசையில்’ செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 2016, ஏப்ரல் மாதமும் ’மாலை மலர்’ தளத்தில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இதிலிருந்து தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கிக் கடன் உதவி அளித்தது 2015, என்பதும் அப்போதே இதுதொடர்பாகத் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதையும் அறியமுடிகிறது. இது தற்போது நடந்ததாகத் தவறாகப் பரப்பப்படுகிறது.

அடுத்ததாக, ” 'உலகெங்கும் சூரிய சக்தியை ஊக்குவிக்கும், ’ஐ இ ஏ’ (இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்றுச் சக்திக் கண்டுபிடிப்பு அமைப்பு, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும் பாராட்டி, இதனால், இந்தியா சூரிய சக்தியைப் பெறுவதில் ஒரு பெரிய மைல் கல்லைத் தொட்டிருக்கிறது' அன்று புகழ்ந்துள்ளதாக” அப்பதிவில் உள்ளது.
பரவக்கூடிய மேற்கண்ட தகவலில் அணு சக்தி, சூரிய சக்தி என முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் உள்ளன. மேற்கொண்டு இது பற்றி தேடியதில், 2030க்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 18 சதவீதம் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்குமென IEA (International Energy Agency) கூறியதாக ‘Economic Times’ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2023ம் ஆண்டு ஜப்பானை விட சூரியஒளி மூலம் இந்தியா அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது என்ற செய்தி கடந்த மே மாதம் ‘இந்து தமிழ் திசை’, ’நியூஸ் 18 தமிழ்நாடு’ ஊடகங்களில் வெளியாகியிருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால், பரவக்கூடிய தகவலில் இருப்பது போன்ற கருத்தினை IEA கூறியதாக எந்தச் செய்தியிலும் இல்லை.
அடுத்தபடியாக ”அடுத்த ஓராண்டில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச ’வை-ஃபை’ சேவையை அளிக்கப் போவதாகவும் இந்தியாவை சேர்ந்த 20 லட்ச இளைஞர்களுக்கு ’ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்’ பயிற்சி அளிப்பதாகவும்” பரவக்கூடிய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் நூறு இரயில் நிலையங்களில் இலவச WiFi சேவை வழங்கும் திட்டம் என்பது 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு பாதிக்குள் 400 இரயில் நிலையங்களில் இலவச WiFi வசதியைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 2018-லேயே அந்த இலக்கை எட்டிவிட்டது. மேலும் இந்தியாவில் இணையச்சேவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இந்தத் திட்டத்தை படிப்படியாகக் கூகுள் குறைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்தது தொடர்பாக ‘விகடனில்’ செய்தி வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இத்திட்டத்தைத் தற்போது RailTel முழுமையாக மேற்கொண்டு வருவதாக ‘நியூஸ் 18 தமிழ்நாடு’, 'Zee Tamil News' தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவை எதுவும் தற்போது நடந்தவை கிடையாது.

கடைசியாக, ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வழங்கப்படும் ’CBSC’ பள்ளி பாடப் புத்தகங்கள் இனி ஆன்லைனில் கிடைக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல், பரவக்கூடிய பதிவில் உள்ளது.
ஒன்றிய அரசின் NCERT (National Council of Educational Research and Training) தளத்தில் நீண்டகாலமாக CBSC பாடப்புத்தகங்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழ்நாடு அரசு வெளியிடக்கூடிய பாடப்புத்தகமும் அரசின் தளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தற்போதுதான் இதனைக் கொண்டுவந்தது போன்றும் இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்றும் ஒரு தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
இவற்றிலிருந்து வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மிகைப்படுத்தி தற்போது நடந்தது போன்றும் அதனைத் தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்றும் தவறான தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
மோடியின் ஆட்சியைப் பாராட்டிக் கடந்த 10 நாட்களில் வெளியான செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை எனப் பரவும் தகவல் தவறானது.
தமிழ் ஊடகங்கள்:
புதியதலைமுறை TV
தந்தி TV
நீயூஸ்7 TV
நீயூஸ் 18 TV
சன் TV
பாலிமர்TV
JAYATV TV
நீயூஸ் j TV
இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்ல செய்திகள் கீழ்க்கண்டவாறு:
கடந்த 10 நாட்களாக, சில மிக நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித… pic.twitter.com/X2ztPS85dL
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) June 15, 2024