யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் தியா குமாரி, வாள்வீசுவதைப் பாருங்கள் என்று கூறி, பெண் ஒருவர் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் வாள் வீசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜக ஆதரவாளர்கள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் ராஜஸ்தான் துணை முதல்வரான தியா குமாரி அல்ல என்பதை அறிய முடிந்தது.
Nikitabaa Rathod Official என்ற யூடியூப் பக்கத்தில் ஜனவரி 23 அன்று பரவி வரும் இதே வீடியோ "தல்வர்பாஜி.. நிகிதாபா ரத்தோடு" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் இதே யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்களையும் இவர் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் இவர் ஒரு வாள்வீச்சாளர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் நிகிதாபா ராத்தோடு (nikitabaa_rathod) என்ற இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இதே வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் இவரது இன்ஸ்டாகிராம் சுயவிபரத்தை ஆய்வு செய்ததன் மூலம், இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும், இவர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகிறது.

பரவி வரும் வீடியோவில் வரும் யூடியூபர் நிகிதாபா ராத்தோடு புகைப்படத்தையும், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் தியா குமாரியின் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்துள்ளதை கீழே காணலாம். இருவரும் வேறு வேறு நபர்கள். யூடியூபர் நிகிதாபா ராத்தோடு வீடியோவை, சிலர் ராஜஸ்தான் துணை முதல்வர் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோவிலின் ஒரு நாள் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோவில் வீடியோ!
இதற்கு முன்பும் ராஜஸ்தான் குறித்து பல செய்திகள் தவறாகப் பரப்பப்பட்டன. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ராஜஸ்தான் முதல்வர் நடனமாடி ஒரு பெண்ணை இடித்ததாகப் பரவும் பொய்!
முடிவு:
நம் தேடலில், ராஜஸ்தான் துணை முதலவர் வாள் வீசுவதைப் பாருங்கள் என்று பரவி வரும் வீடியோவில் இருப்பவர் யூடியூபர் நிகிதாபா ராத்தோடு என்பதை உறுதி செய்ய முடிகிறது.
“शत्रुदल में मच गई हाहाकार, जब उठाया तीर तलवार”
ये राजस्थान की उप मुख्यमंत्री @KumariDiya जी है इनको तलवार ऐसे भांजते हुए लग रहा है मानों कोई राजस्थान की वीरांगना है । अद्भुत है
pic.twitter.com/AWcNGrUydI
— Dr. Sudhanshu Trivedi Satire (@Sudanshutrivedi) January 28, 2024
“शत्रुदल में मच गई हाहाकार, जब उठाया तीर तलवार”
ये राजस्थान की उप मुख्यमंत्री @KumariDiya जी है .
इनको तलवार ऐसे भांजते हुए लग रहा है मानों कोई राजस्थान की वीरांगना है । अद्भुत है pic.twitter.com/NO2KFPys7a
— राष्ट्रवादी रवि राजा (@RaviRajaUp) January 29, 2024