YouTurn

ராகுல்காந்தி உரையை மெய்மறந்து கேட்ட விராட்கோலி எனப் பரவும் போலிப் புகைப்படம் !

ராகுல்காந்தி உரையை மெய்மறந்து கேட்ட விராட்கோலி எனப் பரவும் போலிப் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையில் தன்னையே மெய்மறந்த விராட் கோலி!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

17 வது ஐபிஎல் போட்டி கடந்த 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் மோது, தனது ஓய்வு அறையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரையை மெய்மறந்து கேட்டு ரசிப்பதைப் பாருங்கள் என்று கூறி விராட்கோலி தனது மொபைலில் ராகுல்காந்தியின் வீடியோவைப் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனை 'Asianet News தமிழ்' ஊடகமும் தனது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் குறித்து விராட்கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் ராகுல் காந்தியின் வீடியோவைப் பார்ப்பது தொடர்பாக எந்த புகைப்படங்களையும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

விராட்கோலியின் ரசிகர்கள் இயக்கிவரும் ViratGang என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மார்ச் 21 அன்று பரவிவரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம், "ஜியோ விளம்பரத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் முன் விராட் கோலி ஓய்வு எடுக்கிறார்" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



இதே போன்றே, விராட்கோலி ரசிகர்களின் மற்ற சமூக ஊடகப்பக்கங்களிலும், இதேப் புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிலும், விராட்கோலி தனது கையில் உள்ள மொபைலில் ராகுல்காந்தியின் வீடியோவைப் பார்க்கவில்லை என்பதை தெளிவாகக் காண முடிகிறது



இதன் மூலம் விராட்கோலி கையில் மொபைல் வைத்து பார்த்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை, சிலர் ராகுல்காந்தியின் வீடியோவைப் பார்ப்பது போன்று எடிட் செய்து சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: 2023 உலகக்கோப்பை தோல்வியால் கோலி, ரோஹித் சர்மா படங்களை ரசிகர்கள் தாக்குவதாகப் பரவும் பழைய வீடியோ !

முடிவு:

நம் தேடலில், ராகுல்காந்தி உரையை மெய்மறந்து கேட்ட விராட்கோலி எனப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க