YouTurn

வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் மருத்துவ உதவியை நிராகரித்த ராகுல் காந்தி எனப் பரவும் வதந்தி !

வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் மருத்துவ உதவியை நிராகரித்த ராகுல் காந்தி எனப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தயிர் உப்பு என்று 2021 தேர்தலின் பொழுது வெங்காய பச்சடி செய்த பப்பு.. உதவி கேட்ட Village Cooking Team ஐ உதாசீனப்படுத்தி தன் "உதவாக்கர" புத்தியை வெளிக்காட்டும் வீடியோ இது. சரியா தான் கூட்டு சேர்ந்து இருக்காங்க..



X Link:

விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தலையடுத்து ராகுல்காந்தி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலிக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தியிடம், "வில்லேஜ் குக்கிங் சேனல்" என்ற பிரபல யூடியூப் சேனலின் உரிமையாளர்களுள் ஒருவரான "பெரிய தம்பி" என்ற முதியவரின் இதயநோய் சிகிச்சைக்கு உதவி கேட்டுள்ளனர்.

ஆனால் ராகுல் காந்தி அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். 2021 சட்ட மன்ற தேர்தலின் போது மட்டும் அவர்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியும் கொண்டார் என்று கூறி 41 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



X Link:

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது பாஜகவினரால எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.

"வில்லேஜ் குக்கிங் சேனல்" யூடியூப் சேனலின் உரிமையாளர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் வேலுச்சாமி, பரவி வரும் இந்த செய்திகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.



அதில், "இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!"என்றும் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.

இதன் மூலம் ராகுல் காந்தி குறித்து பாஜகவினரால் பரப்பப்படும் செய்திகள் உண்மையானவை அல்ல என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: ராகுல் காந்தி தோசை பற்றிப் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

இதற்கு முன்பும் ராகுல் காந்தி குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ராகுல் காந்தி இந்து கடவுள் சிலையை வாங்காமல் அவமதித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

முடிவு:

நம் தேடலில், ராகுல் காந்தி "வில்லேஜ் குக்கிங் சேனல்" யூடியூப் சேனலின் உரிமையாளர்களுள் ஒருவரான பெரிய தம்பியின் இருதய சிகிச்சைக்கு உதவி செய்யவில்லை என்று கூறி சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க