YouTurn

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட திறந்தவெளி கழிப்பறை என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட திறந்தவெளி கழிப்பறை என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவை ஒருவர் கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவிட்டிருந்தார். அதில் “Chinsurah” என்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அது மேற்கு வங்கம் ஹூக்ளியில் உள்ள சின்சுரா என்ற ஊர் என்று தெரியவந்தது. அங்கு நடைபெற்ற இஸ்லாமிய கூட்டம் தொடர்பாக வேறு வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார்.

பரவிய செய்தி

விடியல் அரசு..விடிஞ்சாலும் போகமாட்டீங்குது

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

திமுக அரசு கட்டிய திறந்தவெளி கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது MrAli-2530 என்ற நபரின் யூடியூப் பக்கத்தில், 27 டிசம்பர், 2025 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. அதில் Chinsurah என்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. அந்த பெயரை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது அது மேற்கு வங்கம் ஹூக்ளியில் உள்ள சின்சுரா என்ற ஊர் என்று தெரியவந்தது. மேலும் அந்த வீடியோவில் இஸ்லாமியர்கள் இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. 


இது தொடர்பாக அந்த நபரின் சமூக வலைதளப்பக்கங்களை ஆய்வு செய்த போது, அங்கு இஸ்லாமியக் கூட்டம் நடப்பது தொடர்பாக பல காணொளிகளை வெளியிட்டிருந்தார். மேலும் கழிப்பறைகள் அமைக்கப்படுவது, ஒவ்வொன்றுக்கும் தற்காலிக மறைப்புகள் அமைக்கப்படுவது என்று பல காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பரவி வருவது மேற்கு வங்கத்தில் மத நிகழ்வுக்காக தற்காலிகமாக கழிப்பறைகள் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அமைத்த திறந்தவெளிக் கழிப்பறை எனக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க