யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். இதனை ’Operation Sindoor’ உடன் தொடர்படுத்தி பாஜகவினர் தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் தாக்குதல் என்று ராக்கெட்டுகள் மூலம் தாக்கும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் 🔥🔥🔥#IndiaPakistanWar #OperationSindoor #IndianArmy pic.twitter.com/42KD0LHIMZ
உண்மை என்ன ?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Roman Motychak எக்ஸ் தள பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் பரப்பப்பட்டு வரும் காணொளி மார்ச் 27, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது. மேலும் "Zemledeliye" (விவசாயம்) என்று அழைக்கப்படும் சமீபத்திய தொலைதூர சுரங்க அமைப்பைப் பயன்படுத்தி உக்ரைனின் Kharkiv என்ற பகுதியில் ரஷ்யர்கள் சுரங்கத்தை மேற்கொள்வதாகவும், இது 5 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கங்களை அமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
what you see is the russians performing distance mining of Kharkiv region with the latest remote mining system called "Zemledeliye" (Agriculture)... it lays mines at a distance of 5 to 15 km.
needless to say, that this is meant to kill civilians and make farming near impossible. pic.twitter.com/dqUZ4dDYes
இது குறித்து மேலும் தேடுகையில், OSINTtechnical என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் அதே காணொளி மார்ச் 27, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகள் "Земледелие"(விவசாயம்) என்ற ஏவுகணை சுரங்க அமைப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.
Kharkiv region, Russian forces reportedly used the rocket mining system “Земледелие”
Utilizes rockets to deploy a mine payload at distance. pic.twitter.com/O2lrAsiD5h
இதையடுத்து இது தொடர்பாக எதுவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அறிய keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது TOP WAR என்ற இணையதள பக்கத்தில், "The use of the latest remote mining system "Agriculture" near Kharkov was shown on video", என்ற தலைப்பில் மார்ச் 27, 2022 அன்று, இது குறித்து செய்தி வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் ”உக்ரைனை ராணுவ மயத்திலிருந்தும், நாஜிமயமாக்கலில் இருந்தும் மீட்பதற்கு ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், நீண்ட காலமாகச் சேவையில் உள்ள ராணுவ உபகரணங்களையும், தொலைதூர சுரங்கம் உள்ளிட்ட சமீபத்திய அமைப்புகளையும் பயன்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். இதனை ’Operation Sindoor’ உடன் தொடர்படுத்தி தவறாக பரப்புகிறார்கள்.
