YouTurn

ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரத்தில் மக்கள் 'மோடி மோடி' என கோசமிட்டதாக எடிட் செய்த வீடியோவைப் பரப்பிய அசாம் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரத்தில் மக்கள் 'மோடி மோடி' என கோசமிட்டதாக எடிட் செய்த வீடியோவைப் பரப்பிய அசாம் முதல்வர்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மோடி ஜி நிச்சயம் - மோடி மட்டுமே வருவார்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மத்திய பிரதேசத்தில் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோ நாகா முன்னணி ஆகிய கட்சிகள் தற்போது ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான தேர்தல்கள் தற்போது வரை நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் "ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு உள்ள மக்கள் "மோடி மோடி" என்று கூச்சலிடுவதைப் பாருங்கள்" என்று கூறி 17 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை News18 Bihar சேனல் உட்பட, பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

அசாம் மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், "மோடி ஜி வருவது நிச்சயம், மோடி தான் வருவார்" என்று குறிப்பிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ வருகின்ற நவம்பர் 25 அன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்காக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ, அசோக் கெலாட்டின் யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவின் 2:20 நிமிடத்தில் சரியாக பொருந்தியது. டோங்க் மாவட்டத்தில் உள்ள மால்புராவில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அவர் தன்னுடைய ஏழு வாக்குறுதிகள் குறித்து பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, பொது மக்கள் சத்தம் எழுப்பியதால் "கேளுங்கள், கேளுங்கள்" என்று அவர் கூறுவதையும், அதை அவருக்கு அருகில் இருக்கும் வேட்பாளரும் சைகையில் செய்வதையும் காண முடிந்தது.

ஆனால் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில் இருப்பது போன்று, இதன் உண்மையான வீடியோவில் அசோக் கெலாட் பேசும் போது பொதுமக்கள் "மோடி மோடி" என்று கூச்சலிடவில்லை. இந்த வீடியோ தவறாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்று நம்பி அசாம் முதலமைச்சரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஆபாசமாகப் பேசியதாக எடிட் வீடியோவைப் பரப்பிய பாஜகவின் அமித் மாள்வியா !

மேலும் படிக்க: மல்யுத்த வீரர்கள் கைதுக்கு பின் சிரித்து செல்ஃபி எடுத்ததாக பாஜகவினர் பரப்பிய எடிட் படம்.. வீடியோவில் என்ன பேசினார் ?

முடிவு:

நம் தேடலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசும் போது பொதுமக்கள் "மோடி மோடி" என்று கூச்சலிட்டதாக அசாம் முதல்வர் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க