யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் காணப்படும் சிறுமி ராஜஸ்தான் சம்பவத்தில் தொடர்புள்ள சிறுமி அல்ல. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதிக்கு தொடர்புடைய வழக்கின் வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பாஜக ஆட்சி ராஜஸ்தானில்
13 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டு
5நாட்கள் மூன்று ஓட்டல்களில் மாறி மாறி காவல்துறை உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் கொடுமை செய்த நிகழ்வு
rss பொறம்போக்கு நாய்கள் தான் அதிகம் என்று அந்த சிறுமி வாக்குமூலம்
பாஜகவின் கிளை தான் தமிழகத்தில

விரிவான விளக்கம்
ராஜஸ்தானின் சிறுமி கடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இந்தியா டெய்லி எனும் ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 02, 2026 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது, ராஜஸ்தான் காவல்துறை எக்ஸ் பக்கத்தில் ஜூலை 04, 2026 அன்று வெளியான பதிவு ஒன்றை காண முடிந்தது. அதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சிறுமி ராஜஸ்தான் சம்பவத்தில் தொடர்புள்ள சிறுமி அல்ல என்றும், அது உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதிக்கு தொடர்புடைய வழக்கின் வீடியோ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
जिसे आप सच मान रहे हैं वह अफवाह है...#SriGanganagar #RajasthanPolice #FactCheck #FakeNewsAlert #SayNoToRumours #HardoiPolice #SocialMediaResponsibility #UPPolice#UttarPradeshPolice pic.twitter.com/W6cALfNU8t
முடிவு:
எனவே, பரவி வரும் வீடியோவில் காணப்படும் சிறுமி ராஜஸ்தான் சம்பவத்தில் தொடர்புள்ள சிறுமி அல்ல. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதிக்கு தொடர்புடைய வழக்கின் வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.