யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் இருக்கும் பெண், பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ரா ஆகும். ராகுல் காந்தி தனது தங்கை மகளான மிராயா வத்ராவுடன் இருக்கும் பழைய வீடியோவை பரப்பியவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுப்ரிய ஷ்ரினேட் விமர்சித்திருந்ததையும் பார்க்கமுடிந்தது.
பரவிய செய்தி
வெளிநாட்டுக்கு ஒரு பெண்ணுடன் இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போல நம்ம பப்பு
யாருயா அந்த பொண்ணு??? @RahulGandhi

விரிவான விளக்கம்
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வெளிநாட்டுக்கு ஒரு பெண்ணுடன் இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போல நம்ம பப்பு😂
யாருயா அந்த பொண்ணு??? @RahulGandhi 😌 pic.twitter.com/1ZTdqhrsGt
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து தங்களது ஆய்வினை தொடங்கினோம். பரவி வரும் வீடியோ குறித்து நவம்பர் 13 அன்று, காங்கிரஸ் கமிட்டி தலைவரான சுப்ரியா ஷ்ரினேட் வெளியிட்ட பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் வைரலாகும் வீடியோவில் ராகுல் காந்தியுடன் இருப்பது அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் மகளான மிராயா வத்ரா என்பதையும், இதை தவறாக பகிர்ந்தவர்களை விமர்சித்திருந்ததையும் காணமுடிந்தது.
राहुल गांधी का अपनी भांजी के साथ का सितंबर 2025 का वीडियो चला कर उसको अभी लंदन का बताने वाले गिद्ध
विशुद्ध झूठे हैं
और वह पारिवारिक रिश्तों की मर्यादा भी नहीं समझते
क्योंकि संघियों के दिमाग़ में गोबर भरा हुआ है
वो सिर्फ़ घटिया बातें करके ज़हर उगल सकते हैं
இதையடுத்து மிராயா வத்ராவின் வேறு சில புகைப்படங்கள் குறித்து தேடினோம். அப்போது getty images இணையதளப்பக்கத்தில் அவரது பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதையும், பரவி வரும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டும் ஒன்றாக இருப்பதை பார்க்கமுடிந்தது.

அதே போல் ராஜஸ்தானில் 18-வது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா காந்தி மகள் மிராயா வத்ரா பங்கேற்றார் என்று தினத்தந்தி ஊடகத்தில் டிசம்பர் 12 அன்று வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் ராகுல் காந்தியுடன், மிராயா வத்ரா இருந்த புகைப்படத்தை பார்க்கமுடிந்தது.

முடிவு:
எனவே பரவி வரும் வீடியோவில் இருப்பது ராகுல் காந்தியுடன் இருப்பது அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் மகளான மிராயா வத்ரா ஆகும். இதை வெளிநாட்டுக்கு ஒரு பெண்ணுடன் இன்பச் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி என்று தவறாகப் பரப்புகின்றனர்.