YouTurn

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Azerbaijan நாட்டை சேர்ந்த sadiq என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த காணொளியின் CAPTION-ல் BMW E46 M3 CSL கார் குறித்துப் பதிவிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

இந்த முஸ்லீம் தீவிரவாதிகள் தான் காஸ்மீரில் தாக்குதல் நடத்திய குருப்... இவனுங்களையும் இதற்கு மூளையாக யார் செயல்பட்டு இருந்தாலும் வேட்டையாட வேண்டும் மோடி ஜீ…

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணி குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன ? 

பரவி வரும் காணொளியில் உள்ள water mark-ஐ கொண்டு தேடினோம். அப்போது kavkaz. wq என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் பரவி வரும் காணொளி ஏப்ரல் 14ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அந்த காணொளியின் CAPTION-ல் BMW E46 M3 CSL கார் குறித்துப் பதிவிடப்பட்டுள்ளது. 

அதே போல் அவரது இன்ஸ்டாகிராம் bioவில் Arabic மற்றும் Russian மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவர் 𝐌𝐌𝐀 𝐁𝐎𝐗𝐈𝐍𝐆 𝐉𝐔𝐃𝐎 வீரர் என்பதையும் bioவில் குறிப்பிட்டிருந்தார். 

image.png

மேலும் இதை உறுதி செய்ய,  இந்த காணொளியை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Azerbaijan நாட்டை சேர்ந்த  _sadiq999_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் பரவி வரும் காணொளி, ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அந்த காணொளியின் CAPTION-ல் BMW E46 M3 CSL கார் குறித்துப்பதிவிடப்பட்டிருந்தது. 

அவரது இன்ஸ்டாகிராம் bioவில் video creator என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த இன்ஸ்டா பக்கத்தில் கார் குறித்த  பல்வேறு காணொளிகளும், நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது போன்ற பல காணொளிகளையும்  அவர் பதிவிட்டு வருகிறார். 

image.png

முடிவு : 

Azerbaijan நாட்டில் உள்ள நபர்களின் வீடியோவை எடுத்து, அவர்கள் தான் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க