YouTurn

உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் இத்தாலி இரயிலின் புகைப்படம் !

உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் இத்தாலி இரயிலின் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உத்திரபிரதேசத்தின் லோக்கல் ரயில்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் தலைவர் டி.ரூபின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் " எனக் கூறி இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவை தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் லைக் செய்தும் இருக்கிறார்.

உண்மை என்ன ? 

பாஜகவினர் பகிர்ந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அதே மாதிரியான இரயிலின் வேறொரு புகைப்படம் 2022 மார்ச் 22ம் தேதி புகைப்பட விற்பனை தளமான Alamy-ல் வெளியாகி இருக்கிறது.



அதில், இத்தாலியின் வெனிஸில் உள்ள மெஸ்ட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரியின்(Nuovo Trasporto Viaggiatori-NTV) அதிவேக ரயில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பகிரப்படும் புகைப்படத்திலும் இரயிலின் முன்பாக NTV என எழுதப்பட்டு இருக்கிறது. நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரி(NTV) எனும் தனியார் நிறுவனம் இத்தாலி நாட்டில் அதிவேகமான இரயிலை இயக்கி வருகிறது.


" உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் ரயில்" எனும் பதிவை முதலில் கு.அண்ணாமலை ஆர்மி எனும் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு உள்ளது. இது பாஜகவினரை ட்ரோல் செய்யும் வகையில் இயங்கும் பரோடி பக்கம். 




மேலும் படிக்க : குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !

இதற்கு முன்பாக, இதே பக்கத்தில் வெளியான நையாண்டிப் பதிவை பாஜகவினர் உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பியது குறிப்பிடத்தக்கது

முடிவு : 

நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் புகைப்படம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் அதிவேக இரயில் என அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க