யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.
பரவிய செய்தி
என்னது பைக்குக்கு கட்டணமா.?
ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு
சாமானிய மக்களின் உழைப்பை
வரி என்ற பெயரில் புடுங்கும்
ஒன்றிய பாஜக அரசு...!

விரிவான விளக்கம்
வரும் ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரசீலித்து வருவதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. சாமானிய மக்களின் உழைப்பை
வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு வசூலித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு
சாமானிய மக்களின் உழைப்பை
வரி என்ற பெயரில் புடுங்கும்
ஒன்றிய பாஜக அரசு...!😡😡
வீணா தாண்டா போவீங்க pic.twitter.com/hwQWzlJ005
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடி பார்த்தோம். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது குறித்து ஜூன் 26ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுயிருந்தது. அதில் ”இந்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்த விரும்புவதாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
#FactCheck: Some sections of the media have reported that the Government of India plans to levy user fees on two-wheelers. #NHAI would like to clarify that no such proposal is under consideration. There are no plans to introduce toll charges for two-wheelers. #FakeNews
அதே போல் ஒன்றிய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தனது எக்ஸ் பக்கத்தில், வைரலாகும் பதிவு தவறானது என்பதை உறுதி செய்துள்ளார். அதில் அவர், ”சில ஊடகங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கவிருப்பதாக தவறான செய்திகளைப் பரப்புகின்றன என்றும், உண்மைத்தன்மையை ஆராயாமல் தவறான செய்திகளைப் பரப்பி, அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடகத்திற்கு அடையாளம் அல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.
📢 महत्वपूर्ण
कुछ मीडिया हाऊसेस द्वारा दो-पहिया (Two wheeler) वाहनों पर टोल टैक्स लगाए जाने की भ्रामक खबरें फैलाई जा रही है। ऐसा कोई निर्णय प्रस्तावित नहीं हैं। दो-पहिया वाहन के टोल पर पूरी तरह से छूट जारी रहेगी। बिना सच्चाई जाने भ्रामक खबरें फैलाकर सनसनी निर्माण करना स्वस्थ…
மேலும் PIB Tamilnadu தனது எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் செய்தி தவறனாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதை பார்க்கமுடிந்தது.
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்குச் சங்கக் கட்டணம்?
👉🏼 சமூக ஊடகங்களில், ஜூலை 15, 2025 முதல் இருசக்கர வாகனங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சில செய்திகள் பரவி வருகின்றன.@NHAI அதிகாரப்பூர்வமாக இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. https://t.co/Utd2C52ntx
முடிவு :
நம் தேடலில், ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது தெரியவந்தது.