YouTurn

கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் “RowdyTime” என்று குறிப்பிட்டுள்ளாரா உதயநிதி? உண்மை என்ன?

கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் “RowdyTime” என்று குறிப்பிட்டுள்ளாரா உதயநிதி? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“RowdyTime” என்று குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தில் “RowdyTime” என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பரவிய செய்தி

DMK va adikiradhuku ivaney podhum !

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

“RowdyTime” என்று குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய, எங்கள் ஆய்வினை தொடங்கினோம். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சமூகவலைதளப் பக்கங்களில் தேடினோம். அப்போது  ஜனவரி 02, 2026 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த பதிவில் எந்த விதமான Caption-ம் இடம்பெறவில்லை. 


மாறாக தனது நாயுடன் இருக்கும் புகைப்படத்தையே சமூகவலைதளங்களில் வெளியிட்டு, அதிலே தான் RowdyTime என்று வழக்கமாக குறிப்பிட்டு வருகிறார். இதை எடிட் செய்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் RowdyTime என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக பரப்புகின்றனர். 


முடிவு: 

நம் தேடலில், “RowdyTime” என்று குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தில் “RowdyTime” என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க