YouTurn

முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றிய உண்மைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

உத்தரப்பிரதேச முதலமைச்சர் காவி உடை அணிந்திருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு "சன்யாசி". அவரைப் பற்றி வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள் இவை. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அஜய் மோகன் பிஷ்ட் (அசல் பெயர்). ஓய்வுக்குப் பிறகு யோகி ஆதித்யநாத். வயது-50 ஆண்டுகள். பிறந்த இடம்- பஞ்சூர் கிராமம், கர்வால், உத்தரகண்ட். HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் உத்தரபிரதேச வரலாற்றில் அதிக மதிப்பெண்கள் (100%). யோகி ஜி கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் B.Sc கணிதத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு கணித மாணவர். அவர் இந்திய ராணுவத்தின் பழமையான கூர்க்கா படைப்பிரிவின் ஆன்மீகத் தலைவர். (யோகியை குருவாக வணங்கும் யோகி ஆதரவாளர்கள் என்று ஒரு பெரிய குழு நேபாளத்தில் உள்ளது). தற்காப்புக் கலைகளில் அற்புதமாக சிறந்து விளங்குகிறார். ஒரே நேரத்தில் நான்கு பேரை தோற்கடித்த சாதனை. உத்தரப் பிரதேசத்தின் பிரபலமான நீச்சல் வீரர். பல பெரிய ஆறுகளை நீச்சல் அடித்து கடந்து உள்ளார். கணினிகளைக் கூட வெல்லும் கணக்கியல் நிபுணர். பிரபல கணிதவியலாளர் சகுந்தலா தேவியும் யோகிஜியைப் புகழ்ந்தார். இரவில் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்குகிறார். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்திருப்பார். யோகா, தியானம், கோசாலை, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுகிறார். முற்றிலும் சைவம். உணவில் கிழங்குகள், வேர்கள், பழங்கள் மற்றும் உள்ளூர் பசுவின் பால் ஆகியவை அடங்கும். இதுவரை எந்த காரணத்திற்காகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் யோகி ஆதித்யநாத் ஒருவர். அவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்கிறார். யோகியின் குடும்பம் எம்.பி. அல்லது முதலமைச்சராக மாறுவதற்கு முன்பு இருந்த அதே நிலையில்தான் இன்னும் வாழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சன்யாசம் எடுத்த பிறகு யோகி வீட்டிற்கு ஒரு முறை மட்டுமே சென்றுள்ளார். யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது, அவரது பெயரில் நிலமோ அல்லது சொத்தோ இல்லை, அவருக்கு எந்த செலவும் இல்லை. அவர் தனது சொந்த சம்பளத்திலிருந்து தனது உணவு மற்றும் உடைகளை செலவழித்து மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார். "இது யோகி ஆதித்யநாத்தின் சுய விவரம்.." யோகி ஜி தூங்கும் அறையில் ஏசி அல்லது அறை குளிர்விப்பான் இல்லை, ஒரே ஒரு சீலிங் ஃபேன் மட்டுமே உள்ளது. யோகி ஜி ஒரு மரப் படுக்கையில் போர்வை மற்றும் ஒரு விரிப்பு விரிக்கப்பட்டு தூங்குகிறார், அதன் மேல் டன்லப் குஷன் & தலையணை இல்லை. (இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உண்மையான தலைவரின் சுய விவரம் இப்படி இருக்க வேண்டும்.) அத்தகைய துறவிகளால் மட்டுமே இந்தியாவை மீண்டும் உலகத் தலைமையாக மாற்ற முடியும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


அதில், “அஜய் மோகன் பிஷ்ட் (உண்மையான பெயர்). ஓய்வுக்குப் பிறகு யோகி ஆதித்யநாத். வயது-50. பிறந்த இடம்- பஞ்சூர் கிராமம், கர்வால், உத்தரகண்ட். HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் உத்தரபிரதேச வரலாற்றில் அதிக மதிப்பெண்கள் (100%). யோகி ஜி கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் B.Sc கணிதத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு கணித மாணவர்.


அவர் இந்திய ராணுவத்தின் பழமையான கூர்க்கா படைப்பிரிவின் ஆன்மீகத் தலைவர். (யோகியை குருவாக வணங்கும் யோகி ஆதரவாளர்கள் என்று ஒரு பெரிய குழு நேபாளத்தில் உள்ளது). தற்காப்புக் கலைகளில் அற்புதமாக சிறந்து விளங்குகிறார். ஒரே நேரத்தில் நான்கு பேரை தோற்கடித்த சாதனை. உத்தரப் பிரதேசத்தின் பிரபலமான நீச்சல் வீரர். பல பெரிய ஆறுகளை நீச்சல் அடித்து கடந்து உள்ளார். கணினிகளைக் கூட வெல்லும் கணக்கியல் நிபுணர். பிரபல கணிதவியலாளர் சகுந்தலா தேவியும் யோகிஜியைப் புகழ்ந்தார். இரவில் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்குகிறார். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்திருப்பார். யோகா, தியானம், கோசாலை, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுகிறார். முற்றிலும் சைவம். உணவில் கிழங்குகள், வேர்கள், பழங்கள் மற்றும் உள்ளூர் பசுவின் பால் ஆகியவை அடங்கும். இதுவரை எந்த காரணத்திற்காகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. 


ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் யோகி ஆதித்யநாத் ஒருவர். அவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்கிறார். யோகியின் குடும்பம் எம்.பி. அல்லது முதலமைச்சராக மாறுவதற்கு முன்பு இருந்த அதே நிலையில்தான் இன்னும் வாழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சன்யாசம் எடுத்த பிறகு யோகி வீட்டிற்கு ஒரு முறை மட்டுமே சென்றுள்ளார். யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது, அவரது பெயரில் நிலமோ அல்லது சொத்தோ இல்லை, அவருக்கு எந்த செலவும் இல்லை. அவர் தனது சொந்த சம்பளத்திலிருந்து தனது உணவு மற்றும் உடைகளை செலவழித்து மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார். "இது யோகி ஆதித்யநாத்தின் சுய விவரம்.." யோகி ஜி தூங்கும் அறையில் ஏசி அல்லது அறை குளிர்விப்பான் இல்லை, ஒரே ஒரு சீலிங் ஃபேன் மட்டுமே உள்ளது. யோகி ஜி ஒரு மரப் படுக்கையில் போர்வை மற்றும் ஒரு விரிப்பு விரிக்கப்பட்டு தூங்குகிறார், அதன் மேல் டன்லப் குஷன் & தலையணை இல்லை. (இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உண்மையான தலைவரின் சுய விவரம் இப்படி இருக்க வேண்டும்.) அத்தகைய துறவிகளால் மட்டுமே இந்தியாவை மீண்டும் உலகத் தலைமையாக மாற்ற முடியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 




உண்மை என்ன?


பரவி வரும் பதிவுகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து கடந்த 2024-ல் இருந்தே பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. 



எனவே இது குறித்து இணையத்தில் தேடினோம். உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சுயவிவரங்கள் குறித்து, “The Economic Times” வெளியிட்டிருந்த செய்தியின் படி, “யோகி ஆதித்யநாத்தின் இயற்கை பெயர் அஜய் சிங் பிஷ்ட் என்பதும் ஜூன் 5, 1972 அன்று உத்தரகண்டில் உள்ள பஞ்சூர் கிராமத்தில் பிறந்தார். அவர் ஹேம்வதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் கணிதத்தில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் அதில் குறிப்பிடவில்லை. கூடுதலாக, இந்திய ராணுவத்தின் பழமையான கூர்க்கா படைப்பிரிவின் ஆன்மீகத் தலைவர் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. 



யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை விவரிக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான “The Monk Who Became Chief Minister” என்ற புத்தகத்தில் கூட , அவர் இந்திய இராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவின் ஆன்மீகத் தலைவர் என்று எந்தக் குறிப்பும் இல்லை.



இதே போன்று, நேபாளத்தை மீண்டும் ஒரு இந்து தேசமாக அங்கீகரிக்க வலியுறுத்தி, அப்போதைய நேபாள பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியது குறித்த செய்தியையே காண முடிகிறது. யோகி ஆதித்யநாத்தை ஒரு குருவாக வணங்கும் ஒரு பெரிய குழு நேபாளத்தில் இருப்பதாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை. 



மேலும் யோகி ஆதித்யநாத் தனது ஓய்வு நேரத்தில் பூப்பந்து மற்றும் நீச்சல் விளையாடுவதை ரசித்ததாகவும், அவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து யோகா பயிற்சி செய்வதாகப் பகிர்ந்து கொண்ட அவர், ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீதான அவரது அன்பையும் “The Monk Who Became Chief Minister” என்ற புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.


முடிவு:


நம் தேடலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அனைத்து தகவல்களும் உண்மை இல்லை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.