YouTurn

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா? 

30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர்.−செய்தி

தமிழ்நாடு  போலீஸார் எங்க போனாங்க? 

தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA போலீசாருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் ஆந்திராவிலிருந்து காவல்துறை வந்துள்ளது.

இதைப்பற்றி தமிழக ஊடகங்கள் விரிவான செய்திகளோ! விவாதங்களோ நடத்தவில்லை!

image.png

X LINK |  ARCHIEVED LINK

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா என்றும், 30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைப்பற்றியதாகவும், தமிழ்நாடு  போலீஸார் எங்க போனாங்க எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


உண்மை என்ன?

பரவி வரும் செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது TN  DIPR-இன் எக்ஸ் பக்கத்தில் ஜூலை 1, 2025 அன்று "தமிழ்நாடு காவல் துறை 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்ததை காணமுடிந்தது. அதில் 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி தனிப் படையினரால் ஆந்திர மாநிலம் அன்னையார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இது குறித்து மேலும் தேடி பார்க்கையில், ஜூலை 3, 2025 அன்று The Hindu ஊடகப் பக்கத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் "பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


இதே போல் ND TV, Hindustan Times போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

image.png


முடிவு: 

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. இதை மறைத்து தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தவறாக பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க