YouTurn

தமிழ்நாட்டில் தான் அதிகமான பெண் கைதிகள் இருக்கிறார்களா? ரங்கராஜ் பாண்டே சொல்லும் பொய்!

தமிழ்நாட்டில் தான் அதிகமான பெண் கைதிகள் இருக்கிறார்களா? ரங்கராஜ் பாண்டே சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவிலே அதிகமான பெண் கைதிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பது உத்தர பிரதேசம் தான்.

பரவிய செய்தி

’இந்தியாவிலே அதிகமான பெண் கைதிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று NCRB புள்ளி விரவங்கள் தெரிவிக்கிறது’ - ரங்கராஜ் பாண்டே. 


Link

விரிவான விளக்கம்

சாணக்யா யூட்யூப் தளத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல், அதில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிகள் ஆகியவை பற்றி பேசிய ரங்கராஜ் பாண்டே, ’இந்தியாவிலே அதிகமான பெண் கைதிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக NCRB புள்ளி விரவங்கள் தெரிவிக்கிறது’ என்று கூறினார்.



உண்மை என்ன?


மாநில வாரியாக பெண் கைதிகள் குறித்த புள்ளி விவரங்களை இணையத்தில் தேடியபோது, நாடாளுமன்றத்தில் உள்துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்துள்ள விவரங்களைக் காணமுடிகிறது.


இந்தியாவில் சிறைத்துறை குறித்த புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தொகுத்து அதனை ஆண்டுதோறும் ஆவணமாக வெளியிடுகிறது. அப்படி கடைசியாக வெளியிடப்பட்ட ஆவணம் “Prison Statistics India - 2022” ஆகும். இதில் 2022 ஆண்டில் இந்திய சிறைகளில் ஆண்கள், பெண்கள் என பாலியல் வாரியாகவும், இந்து முஸ்லிம் என்று மத ரீதியாகவும் கைதிகள் குறித்த விவரங்கள் உள்ளன. அந்த ஆவணத்தில் உள்ள தரவுகளின் படி தான் அஜய் குமார் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.



அதன்படி, 2022ஆம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டில் 771 பெண் கைதிகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் 4809 பெண் கைதிகள் இருக்கிறது. இந்தியாவிலே இதுதான் அதிகமான எண்ணிக்கையாகும். பீகாரில் 2938 பெண் கைதிகளும், மத்திய பிரதேசத்தில் 1911 பெண் கைதிகளும், மேற்கு வங்காளத்தில் 1778 பெண் கைதிகளும், மகாராஷ்ட்ராவில் 1596 பெண் கைதிகளும் இருப்பதாக தெரியவருகிறது. 


இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் கைதிகளையுடைய மாநிலங்கள் பல இருக்கிறது. ஆயிரத்திற்கு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டை விட அதிகமான பெண் கைதிகளை உடைய மாநிலங்களும் பல இருக்கிறது.


முடிவு:


இந்தியாவிலே அதிகமான பெண் கைதிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பது உத்தர பிரதேசம் தான். ஆனால், தமிழ்நாட்டில் தான் அதிகமான பெண் கைதிகள் இருக்கிறார்கள் என்று ரங்கராஜ் பாண்டே பொய்யான தகவலை பரப்புகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க