YouTurn

தமிழ்நாட்டின் சாலை எனத் தெலங்கானா வீடியோவைப் பரப்பும் அதிமுகவினர் !

தமிழ்நாட்டின் சாலை எனத் தெலங்கானா வீடியோவைப் பரப்பும் அதிமுகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக ஆட்சியின் பரிசு.... காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே.  ஸ்டாலின் தான் வராரு..

X post Link| Archive link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் தேசமடைந்த நிலையில் இருக்கும் சாலைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குழிகள் நிறைந்த ஒரு மண் சாலை ஒன்றில், மழையில் நனைந்தபடியே பயணிக்கும் இருசக்கர வாகன பயணிகள் அனைவரும் வரிசையாக வண்டியிலிருந்து கீழே விழுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை "திராவிட ஆட்சியில் சாலைகளின் நிலை இது தான்" என்று கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.





X post link | Archive link 

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சாலை தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது. மேலும் இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 26-ல் இருந்தே தெலங்கானா மற்றும் ஆந்திரா பகுதி மக்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வந்துள்ளன என்பதையும் அறிய முடிந்தது.



X post link | Archive link 

2023 செப்டம்பர் 26ம் தேதி தெலங்கானாவின் ஜஹீராபாத் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சந்தோஷ் என்பவரது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது.

மேலும், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகள் தெலுங்கு பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. அதில், "தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜஹீராபாத்தின் புறநகர் பகுதியான அல்லானா பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பின்பு ஏறி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 20 பேர் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தனர்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று மற்றொரு செய்தியிலும், " ஜஹீராபாத்தின் அல்கோல் ரோடு பைபாஸ் ரோட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் ரோட்டில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள மண் மழையால் நனைந்துள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி சாலையில் விழுகின்றனர். கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி நிலுவையில் உள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் படிக்க: ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ஸ்லீப்பர் பஸ், குண்டு துளைக்காத பேருந்து எனத் தவறாகப் பரவும் பழைய படங்கள் !

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள மோசமான சாலை எனப் பரவி வரும் வீடியோ, தெலங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத் பகுதியில் உள்ள அல்கோல் சாலையில் விபத்துகள் ஏற்படும் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.  
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க