YouTurn

தெலங்கானாவில் காங்கிரஸ் பதவியேற்றதும் சிலிண்டர் விலையை ரூ500க்கு குறைத்ததாகப் பரவும் பிரச்சார சீட்டின் புகைப்படம் !

தெலங்கானாவில் காங்கிரஸ் பதவியேற்றதும் சிலிண்டர் விலையை ரூ500க்கு குறைத்ததாகப் பரவும் பிரச்சார சீட்டின் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

தெலுங்கானா காங்கிரஸின் சிறப்பான செயல்..! பாராட்டப்பட வேண்டிய விஷயம், பதவியேற்ற முதலே சிலிண்டர் விலை குறைப்பு. வாழ்த்துகள்

X post link | Archive link 

விரிவான விளக்கம்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி அம்மாநில காங்கிரஸ் அரசு கேஸ் சிலிண்டர் விலையைக் குறித்து ரூ.500க்கு அளிப்பதாக ரசீது ஒன்றின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன ?  

தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றதும், காங்கிரசின் 6 முக்கிய வாக்குறுதிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை, பெண்களுக்கான இலவச பயணம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.16000 முதலீட்டு நிதியுதவி, ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர், ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ சேவை வழங்கும் ராஜீவ் ஆரோக்யா உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார் என லைவ் மின்ட் மற்றும் தி இந்து தமிழ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



X post link 

இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி தெலங்கானா முதல்வர், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ சுகாதாரத் திட்டத்திற்கான லோகோ மற்றும் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார்.



வைரல் செய்யப்படும் 2024 ஜனவரி 1ம் தேதியிட்ட கேஸ் சிலிண்டர் குறித்த ரசீது ஆனது தேர்தல் தருணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பிரச்சார சீட்டுகளே. அதில், காங்கிரஸ் கட்சியின் லோகோ இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.



தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட 6 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டு உள்ளது. மாத உதவித் தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்டவை மீதமுள்ளன. அவை இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதால் மானியத்துடன் சமையல் கேஸ் வழங்கப்படும் என பெண்கள் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு சென்று தங்களது ஆவணங்களை இணைத்து வருவதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும் கேஸ் விலை குறைக்கப்பட்டதாகப் பரவும் ரசீது தேர்தல் தருணத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட பிரச்சார சீட்டு மட்டுமே. தற்போது வரை சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

கேஸ் விலை குறைப்பு உள்பட காங்கிரஸ் கொடுத்த 6 வாக்குறுதிகளுக்கான கோப்புகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒப்புதல் அளித்து இருக்கிறார். அவற்றில், இலவச பேருந்து பயணம் மற்றும் காப்பீட்டு திட்டம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க