YouTurn

தெலங்கானாவில் இலவச பேருந்தில் செல்ல அடித்துக் கொள்ளும் பெண்கள் எனப் பரவும் தவறான வீடியோக்கள் !

தெலங்கானாவில் இலவச பேருந்தில் செல்ல அடித்துக் கொள்ளும் பெண்கள் எனப் பரவும் தவறான வீடியோக்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தெலுங்கான மாநில பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

2023 சட்டசபை தேர்தலில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமயிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'மகாலட்சுமி திட்டத்தை' அரசு தற்போது தொடங்கி வைத்துள்ளது. இதன்படி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

இந்நிலையில் தெலங்கானாவில் இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்கள் இடம் கிடைக்காததால் அடித்துக் கொண்டு சண்டை போடுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் அந்த வீடியோக்களில், பெண்கள் கூட்டமாக பேருந்தில் ஏறுவது போன்றும், பேருந்தின் உள்ளே சரமாரியாக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும், பேருந்தில் ஓட்டுனருக்கான கதவின் வழியே ஏறி இடம் பிடிப்பது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளன.



உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோ குறித்த செய்திகளை ஆய்வு செய்ததில், தெலங்கானாவில் இலவச மகளிர் பேருந்திற்கான "மகாலட்சுமி திட்டம்" டிசம்பர் 9 அன்று தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து அறிய முடிந்தது.



மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இந்த வீடியோக்கள் தெலங்கானாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

பெண்கள் பேருந்திற்குள் சரமாரியாக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகளைக் குறிப்பிட்டு கர்நாடகாவைச் சேர்ந்த Belagavivoice ஊடகம் கடந்த ஜூலை 01 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இதே போன்று, ஓட்டுனரின் கதவு வழியே பேருந்திற்குள் ஏறி இருக்கையில் இடம் பிடிக்கும் மற்றொரு வீடியோவும், கடந்த ஜூன் 18 அன்றே tv8kannada965 என்ற யூடியூப் பக்கத்தில் "காங்கிரஸ் அரசுதான் வளர்ச்சியை துவக்கியது" என்ற தலைப்பில் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோவின் மேல் வலது ஓரத்தில் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்துர்க் என்ற ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இரண்டாவதாக உள்ள வீடியோவில் உள்ள மற்ற காட்சிகளான பேருந்து ஜன்னல் வழியாக ஏறுவது, பேருந்திற்குள் சண்டை போடுவது போன்றவையும் 5 மாதங்களுக்கு முன்பே கர்நாடகாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களே.



மேலும் படிக்க: கர்நாடகாவில் இலவச பேருந்தில் பயணிக்க ஜன்னல் வழியாக ஏற முயன்று கையை இழந்த பெண் என பாஜகவினர் பரப்பும் பொய் !

மேலும் படிக்க: அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை நிறுத்த உள்ளதாகப் பரவும் போலிச் செய்தி !

முடிவு:

நம் தேடலில், தெலங்கானாவில் இலவச பேருந்தில் செல்ல அடித்துக் கொள்ளும் பெண்கள் என சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க