YouTurn

கர்நாடகாவில் தமிழர்கள் மீண்டும் தாக்கப்படுவதாக 2016ன் வீடியோவைப் பரப்பும் பாஜக ஆதரவாளர்கள் !

கர்நாடகாவில் தமிழர்கள் மீண்டும் தாக்கப்படுவதாக 2016ன் வீடியோவைப் பரப்பும் பாஜக ஆதரவாளர்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கர்நாடகாவில் கான்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய படி, தமிழன் அடி வாங்க துவங்கி விட்டான். தமிழனுக்கு நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் இருந்த பிஜேபி ஆட்சியை அகற்றி விட்டு தமிழர் விரோத கான்கிரஸ் ஆட்சிக்கு வர தானே ஓடாக உழைத்தாய் தமிழின துரோகிகளே?



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

காவிரி மேலாண்மை ஆணையம் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி கர்நாடகாவிற்கு ஆணையிட்டது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) முழுவதும் பந்த் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தமிழர்கள் அடிவாங்க துவங்கிவிட்டார்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பாஜக ஆதரவாளர்களால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது பதிவு செய்யப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இதுகுறித்து மேலும் தேடியதில், கடந்த 2016 செப்டம்பர் 13 அன்று Red Pix Alpha என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ "காவிரி பிரச்சனை வரிசையில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வயதான லாரி டிரைவர் கன்னடம் பேச கட்டாயப்படுத்தப்பட்டார் - கட்டாயம் பாருங்கள்" என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டிருந்தது. 



1:04 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், "இன்று காலை முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் வன்முறையாளர்கள் இந்த வயதான ஓட்டுனரை கன்னடம் பேசுமாறு கட்டாயப்படுத்தி அடித்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்." என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காவிரி நீர் விவகாரம் வரலாறும் இறுதித்தீர்ப்பும்!.

மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், காவிரி நீர் பிரச்சனையால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது கடந்த 2016ல் ஏற்பட்ட காவிரி பிரச்சனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க