YouTurn

தமிழ்நாடு, உத்தரப்பிரதேச அரசுப் பள்ளியை ஒப்பிட்டு பரவும் புகைப்படங்கள்.. உண்மை என்ன ?

தமிழ்நாடு, உத்தரப்பிரதேச அரசுப் பள்ளியை ஒப்பிட்டு பரவும் புகைப்படங்கள்.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

படம் பேசும் பல உண்மைகள்

விரிவான விளக்கம்

"உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது " என இரண்டு பள்ளி கட்டிடப் புகைப்படங்களை ஒப்பிடும் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/WengersFan/status/1629577380942495750

Archive link 

https://twitter.com/Senthilthanavel/status/1629732669469908992

Archive link 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய புகைப்படத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளி என இருக்கும் புகைப்படத்தைக் கூகுளில் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். கடந்த 25ம் தேதி சென்னை மாநகராட்சியின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

https://twitter.com/chennaicorp/status/1629436905459941378

Archive link 

அதில், ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பள்ளிகளில், 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது’ என மூன்று புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. 

பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி என ஒரு புகைப்படத்திலும், திரு.வி.க நகர் மண்டலம், நம்மாழ்வார் பேட்டை சின்ன பாபு தெருவில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி என வேறொரு புகைப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பரவக் கூடிய பள்ளி வகுப்பறை நம்மாழ்வார் பேட்டை சின்ன பாபு தெருவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி என்பதை அறிய முடிகிறது.

https://twitter.com/chennaicorp/status/1629436953912553472

பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில் (CSR Fund) அரசுப் பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மாா்ட் போா்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஓராண்டுக்கு இணையதள வசதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஓராண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இதற்கு 'டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் சார்பில் ரூ.56,60,100-ம், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 28,87,500 ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி புகைப்படம் : 

உத்தரப் பிரதேசம் அரசுப் பள்ளி எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தினை கூகுளில் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் ‘இமாச்சல் வாட்சர்’ என்ற இணைய தளத்தில் இமாச்சல் கல்வி குறித்து வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் பரவக் கூடிய புகைப்படம் உள்ளதைக் காண முடிந்தது. 



Archive link 

மேற்கொண்டு தேடியதில், 2015 ஆகஸ்ட் மாதம் ‘தி லாஜிகல் இந்தியன்’ என்ற இணைய தளத்தில் உத்திர பிரதேச உயர் நீதி மன்றம் அரசியல்வாதிகள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அளித்த தீர்ப்பு தொடர்பான செய்தியில் பரவக் கூடிய புகைப்படம் உள்ளது.



Archive link 

அதற்கும் முன்னதாக, 2013ம் ஆண்டு ஜூன் மாதம் ‘கேரியர் இந்தியா’ என்ற இணையதளத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற கட்டுரையில் பரவக்கூடிய படம் பதிவிடப்பட்டுள்ளது. 



Archive link 

இருப்பினும் அப்புகைப்படம் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, அப்பள்ளியின் பெயர் என்ன என்பது குறித்த எந்த தகவலும் அக்கட்டுரையில் இல்லை. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பள்ளிகளின் நிலை மோசமாக இருப்பதாக வெளியிடப்படும் பல செய்திகளிலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

2013ம் ஆண்டு காலக்கட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைமையில் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தார். 

மேலும் படிக்க : உத்திர பிரதேச அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு எனப் பரப்பப்படும் பொய்

முன்னதாக உத்தரப் பிரதேச அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படம் குறித்த உண்மைத் தன்மை பற்றி யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், பரவக் கூடிய புகைப்படத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளி எனக் குறிப்பிட்டு உள்ள புகைப்படம் சென்னை நம்மாழ்வார் பேட்டை சின்ன பாபு தெருவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

ஆனால், உத்தரப் பிரதேச அரசுப் பள்ளி எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் புகைப்படம் 2013ம் ஆண்டு முதலே சில செய்தி இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு பள்ளியின் படத்தை ஒப்பீட்டில் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க