YouTurn

“இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக பரவும் போலி செய்தி!

“இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டியோவை முழுமையாக பார்த்த போது, அதில் எங்கும் பாஜக பற்றி பேசவில்லை. மாறாக அதில் தவெக குறித்தும், திமுகவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மட்டுமே பேசியிருந்ததை பார்க்கமுடிந்தது.

பரவிய செய்தி

DMK EXPOSED 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

“இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக சன் நியூஸ் ஊடகத்தின் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த நியூஸ் கார்டில் மே 24, 2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து முன்பு ஏதுவும் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளாரா என்பதை தேடிப் பார்த்த போது, அப்படியான எதுவும் கிடைக்கவில்லை. 


இந்நிலையில் சன் நியூஸ் ஊடகத்தில் சமீபத்தில் அவர் பேசியது குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடிப் பார்த்த பார்த்தோம். அப்போது மே 23, 2026 அன்று "த.வெ.க ஆட்சி 5 ஆண்டுகள் அல்ல, மீண்டும் வெல்வோம் - மு.க. ஸ்டாலின் பேச்சு" என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் உள்ள பின்னணியும், பரவி வரும் படத்தில் உள்ள பின்னணியும் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து அந்த வீடியோவை முழுமையாக பார்த்த போது, அதில் எங்கும் பாஜக பற்றி பேசவில்லை. மாறாக அதில் தவெக குறித்தும், திமுகவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மட்டுமே பேசியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, அண்மையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவை screenshot எடுத்து, இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்  என்று அவர் தெரிவித்ததாக தவெகவினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க