YouTurn

விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !

விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து சந்திரயான் 3 ராக்கெட் ஏவபட்ட காட்சி...



Instagram Link:

விரிவான விளக்கம்

ந்தியா கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து சந்திரயான் 3 ராக்கெட் ஏவப்பட்டதை ரசித்த பயணிகள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை தினமலர் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்களும் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் சந்திரயான் 3 ராக்கெட் என்று கூறிப் பகிர்ந்துள்ளன.



Twitter Link | Archive Link



Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து NDTV  தனது பக்கத்தில் கடந்த பிப்ரவரி 16 அன்று "பார்க்க: SpaceX ராக்கெட் ஏவப்படும்போது விமானம் ஒன்றின் ஜன்னலில் இருந்து பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் SpaceX Falcon 9 ராக்கெட் பூமியை விட்டு வெளியேறும் போது United Airlines விமான பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் இது குறித்து தேடியதில் CNBC ஊடகம் SpaceX என்ற ராக்கெட் ஏவுதளம் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போன்றே, ப்ளோரிடாவில் உள்ள எலான் மஸ்க் உடைய SpaceX ராக்கெட் ஏவுதளம் இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.



மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் 1:15 நிமிட முழு காணொளி NasaNet என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் காண முடிந்தது. அதில் "Cape Canaveral என்ற இடத்தில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்டதைக் காண முடிந்தது." என்று ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.



இதே வீடியோ டிக்டாக் பக்கங்களிலும் SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்ட காட்சி என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.



மேலும் படிக்க: ISRO-க்கும் நேருவிற்கும் தொடர்பில்லை எனப் பரப்பும் வலதுசாரிகள்.. உண்மை என்ன ?

மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு:

நம் தேடலில், டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணிகளால் சந்திரயான் 3 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்டதாக பரவி வரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது சந்திரயான்-3 விண்கலம் அல்ல. இது SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க