யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஆட்சியில் உள்ள போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் என்ற தகுதியை அரவிந்த் ஹெஜ்ரிவால் இழந்துவிட்டார். ஹேமந்த் சோரன் தான் முதல் முதலமைச்சர் !
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், நேற்று (ஜனவரி 31) ஏழு மணி நேர விசாரணைக்கு பின்பு கைது செய்தது. இந்நிலையில் ஆட்சியில் உள்ள போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தான் என்று கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், ஆட்சியில் உள்ள போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தான் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, 1991-96 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியால் 1996, ஜூன் 14 அன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2001-ல் மீண்டும் இவர் முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, இறுதியாக கடந்த 2014 செப்டம்பர் 27 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன்படி ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் தனது எம்.எல்.ஏ. மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார்.

இதன் மூலம் இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டில், ஆட்சியில் இருக்கும் போதே தண்டனை அறிவிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஜெயலலிதா ஆனார். ஆனால் இவர் சிறை செல்வதற்கு முன்பு, தனது பதவியை ஆளுநர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யவில்லை. தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அடுத்த முதலமைச்சராக நியமித்து, தனது பதவியை இழந்தார்.
இதனையடுத்து, 2015 மே 11 அன்று, நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில், அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது. எனவே ஜெயலலிதா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 14, 2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி இல்லையா ?
இதற்கு முன்பு, 1996ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிறகு கலர் டிவி ஊழல், டான்சி நில பேரம் உள்ளிட்ட 7 வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, கடந்த 2001-ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, அவர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை கைதான முன்னாள் முதலமைச்சர்களின் பட்டியல் :
ஜூன் 1997 இல், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் முதல் முறையாக கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலும், எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பல விசாரணைகளுக்கு பின்பு லாலு பிரசாத் யாதவ் கடந்த 2013 இல் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றார்.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் கூறி, கடந்த 2023 செப்டம்பர் 09 அன்று கைது செய்யப்பட்டார்.
2006 முதல் 2008 வரை ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மது கோடா, ஊழல் காரணமாக கடந்த 2008-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து சுரங்க ஊழல் தொடர்பாக கடந்த 2009 நவம்பர் 30 அன்று மாநில காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இந்த வரிசையில், தற்போது நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று ஆட்சியில் இருக்கும் போதே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
முடிவு :
நம் தேடலில், ஆட்சியில் உள்ள போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
Kejriwal lost the opportunity as the first sitting Chief Minister to be arrested. Soren is the first.#SorenArrested
— TrendX Inc (@trendxinc) February 1, 2024
Kejriwal lost the opportunity as the first sitting Chief Minister to be arrested. Soren is the first.
— Harsha Acharya (@harshasbc) January 31, 2024