YouTurn

நேபாளத்திலிருந்து சீதைக்கு வந்துள்ள திருமண சீர்வரிசைகள் எனப் பரவும் தவறான வீடியோ !

நேபாளத்திலிருந்து சீதைக்கு வந்துள்ள திருமண சீர்வரிசைகள் எனப் பரவும் தவறான வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இனி கதறல் ஆரம்பம் அயோத்யா ஶ்ரீ ராம் ஜன்ம பூமிக்கு சீதாதேவி பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன. நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்யாவை வந்தடைந்துள்ளன. ஜெய்ஸ்ரீராம்..



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜனவரி 22 அன்று அயோத்தி ராமர் கோவிலை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சீதைக்கு நேபாள நாட்டிலிருந்து அயோத்திக்கு திருமண சீர்வரிசைகள் வந்துள்ளதாகக் கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மக்கள் கூட்டமாக தலையில் கலசம் போன்ற பொருளை வைத்துக் கொண்டு ஊர்வலமாக வருவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பரவி வரும் பதிவுகளில், நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர் என்றும்,  1100 பெட்டிகளில் சீர்வரிசை வந்துள்ளதாகவும் வந்துள்ளதாகவும் கூறி பரப்பி வருவதையும் காண முடிந்தது. 





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



மேலும் தேடியதில், ETV Bharat ஊடகத்தில் கடந்த 2023 ஜூலை 09 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளுடன், "கிரேட்டர் நொய்டா: பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் பகவத் கதாவுக்கு முன் கலச யாத்திரை எடுக்கப்பட்டது." என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 



அதில், "கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜெய்த்பூர் கிராமத்திற்கு அருகில் ஜூலை 10 முதல் ஜூலை 16 வரை பகவத் கதா பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரியால் ஏற்பாடு செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை, பகவத் கதாவுக்கு முன், கலாஷ் யாத்திரை எடுக்கப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஜானக்பூர் கோவிலிலிருந்து, அயோத்திக்கு ஏதாவது பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், நேபாளத்திலிருந்து 500 பக்தர்கள் மூலம் 3000 பரிசுப்பொருட்கள் வந்துள்ளது குறித்து The Economic Times நேற்று (ஜனவரி 07) வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோ நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்டதல்ல. இது நொய்டாவில் கடந்த 2023 ஜூலையில் நடைபெற்ற கலச ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை வசதி எனப் பரவும் வாரணாசி தற்காலிக கழிப்பறை ஏற்பாடு வீடியோ !

இதற்கு முன்பும் அயோத்தி குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: “அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் !

முடிவு:

நம் தேடலில், சீதாதேவி பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் நேபாளத்திலிருந்து அயோத்திக்கு வந்துள்ளன எனப் பரவும் வீடியோ தவறானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க