யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின் ID card Tag-ல், ASI என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
பரவிய செய்தி
சைவ கோவிலில் அசைவம் சாப்பிட்ட ஊழியர். இந்து கோயில்களில் அசைவ சாப்பாடு சாப்பிடுவது தொடக்கதையாகிவிட்டது.
இந்து அறநிலை துறை என்ன செய்யப் போகிறது.
@tnhrcedept @PKSekarbabu
@CMOTamilnadu @TNDIPRNEWS @HRajaBJP @NainarBJP

விரிவான விளக்கம்
சைவ கோயிலில் ஊழியர் ஒருவர் அசைவம் சாப்பிடதாகவும், இந்து கோயில்களில் அசைவ சாப்பிடுவது தொடர் கதையாகிவிட்டதாகவும், இந்து அறநிலை துறை என்ன செய்யப் போகிறது என்றும் கூறி 1 நிமிடம் 03 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் கடைசியில் பேசிய நபர், இது செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று குறிப்பிடுவதை பார்க்கமுடிந்தது. அதே போல் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின் ID card Tag-ல், ASI ( Archaeological Survey of India ) என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதையடுத்து இந்த கோயில் இந்து அறநிலை துறைக்கு கீழ் செயல்படுகிறதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது தினமலர் ஊடகப் பக்கத்தில், கோயில்கள் என்று ஒரு தொகுப்பு இருந்தது. அதில் ”செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரத்தில் மரம் : பக்தர்கள் வேதனை” என்ற தலைப்பில் அக்டோபர் 11, 2022 அன்று கோவில் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் செஞ்சி கோட்டையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ள வெங்கட்ரமணர் ராஜ கோபுரத்தில் மரங்கள் வளர்ந்து சிலைகள் இடிந்து விழும் பரிதாப நிலையில் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளதாகவும், தற்போது இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வெங்கட்ரமணர் கோவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதை உறுதி செய்ய, செஞ்சியில் இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் குறித்து தேடி பார்த்தோம். அப்போது List of Monuments and Sites, GINGEE SUB-CIRCLE என்ற pdf ஒன்று கிடைத்தது. அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.