YouTurn

தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருவதாக பொய் பரப்பும் சீமான்!

தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருவதாக பொய் பரப்பும் சீமான்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீமான் குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. நடப்பாண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறையின் மானியக் கோரிக்கையில், தமிழ்நாடானது பால் உற்பத்தியில் இந்திய அளவில் 11 வது இடத்திலும், கூட்டுறவின் வாயிலான பால் கொள்முதலில் 4-வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருகிறது - சீமான், நாதக ஒருங்கிணைப்பாளர் 

image.png

Youtube Link

விரிவான விளக்கம்

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதில் மார்ச் 24 அன்று வேலூரில் பரப்புரை செய்த சீமான், தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருவதாக தெரிவித்திருந்தார். 


உண்மை என்ன? 

சீமான் குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டு குறித்து தேடினோம். அப்போது நடப்பாண்டு சட்டமன்றத்தில் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த பால்வளத்துறையின் மானியக் கோரிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் சீமான் குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுக்கு  ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை பார்த்த போது, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது. மாறாக அந்த அறிக்கையின் மூன்றாவது பக்கத்தில், மொத்தப் பால் உற்பத்தி மற்றும் கொள்முதலில் இந்தியாவில் தமிழ்நாடு 11-வது இடத்திலும், கூட்டுறவுப் பால் துறையில் 4-வது இடத்திலும் உள்ளது என்பதை பார்க்கமுடிந்தது. 

இது குறித்து மேலும் தேடியப் போது, அதே அறிக்கையில் 41வது பக்கத்தில் பால் கொள்முதல் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாட்டில் கிராம அளவில் 9,269 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டில் (ஜனவரி 2025 வரை), ஆவின் நிறுவனம் 3.79 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு 33.18 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பால் கொள்முதல் அளவு நாளொன்றுக்கு 4.51 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து நடப்பாண்டு சட்டமன்றத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மானியக் கோரிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் கால்நடைகள் வளர்பதில் தமிழ்நாடு 13-வது இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. 

முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, தமிழ்நாடானது பால் உற்பத்தியில் இந்திய அளவில் 11 வது இடத்திலும், கூட்டுறவின் வாயிலான பால் கொள்முதலில் 4-வது இடத்திலும் உள்ளது. எனவே தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது தவறான தகவலாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க