YouTurn

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை மூக்கையா தேவர் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் எதிர்த்தாரா? சீமான் சொல்லும் பொய்!

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை மூக்கையா தேவர் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் எதிர்த்தாரா? சீமான் சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதிட்டனர்.

பரவிய செய்தி

“கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது நாடாளுமன்றத்தில் அதனை எதிர்த்தது மூக்கையா தேவர் மட்டுமே” - சீமான். 


YouTube Link

விரிவான விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இந்திய அரசு நாடாளுமன்றத்தில் எவ்வித பொது விவாதமும் கருத்துக் கேட்கும் நடத்தாமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டது. இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே ஒருவர் மூக்கையா தேவர் மட்டும் தான்’ என்று பேசினார். 



உண்மை என்ன? 


கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினை குறித்து 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதங்களை காண முடிந்தது. 


அந்த விவாதத்தின் போது அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாஞ்சில் மனோகரன்,செழியன் ஆகியோரும்; முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம். முஹம்மது ஷெரீஃப் ஆகியோரும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் அரசின் முடிவை எதிர்த்து வாதிட்டனர். மேலும் ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் கேசரி தியோ கூட இதனை எதிர்த்து பேசியிருக்கிறார். அப்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த P. K. மூக்கையா தேவரும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த இந்திய அரசின் முடிவை எதிர்த்து பேசினார். 



மேலும் ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில், திமுக, அதிமுக, சோசியலிஸ்ட் கட்சி, ஜன சங்கம் (பாஜகவின் முன்னோடி கட்சி) ஆகிய கட்சிகள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் முடிவை எதிர்த்ததாக தெளிவாக குறிப்பிட்டுள்ளது.


இதிலிருந்து, திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதிட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. 


முடிவு:


இதனை மறைத்து, மூக்கையா தேவர் மட்டுமே, கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கும் இந்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில்  பேசியதாக தவறான தகவலை சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க