YouTurn

விஞ்ஞானிகள் மறுவடிவமைத்துள்ள சாணக்கியாவின் உருவம், தோனியை ஒத்திருப்பதாகப் பரவும் தவறான செய்திகள் !

விஞ்ஞானிகள் மறுவடிவமைத்துள்ள சாணக்கியாவின் உருவம், தோனியை ஒத்திருப்பதாகப் பரவும் தவறான செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அந்த காலத்துல சாணக்கியன் எப்படி இருந்திருப்பார்னு AI உருவாகியிருக்கிறது. அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரான சாணக்யா எப்படி இருந்திருப்பார் என்பதற்கான இந்த 3டி மாதிரியை மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புனரமைத்துள்ளனர்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரான சாணக்யா எப்படி இருந்திருப்பார் என்பதற்கான 3டி மாதிரியை மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புனரமைத்துள்ளனர், சாணக்கியாவின் உருவம் கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியைப் போன்றே இருப்பதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



மேலும் இது Free press journal ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு மகதா டிஎஸ் பல்கலைக்கழகத்தைச் (Magadha DS University) சேர்ந்த விஞ்ஞானிகள், அப்போது இருந்த சாணக்கியாவின் உருவத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளனரா என்பது குறித்து தேடியதில், மகதா டிஎஸ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இந்தியாவில் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் இந்தியாவில், தனலட்சுமி ஸ்ரீனிவாசன் (DS) பல்கலைக்கழகம், மகத் பல்கலைக்கழகம், D.S கல்லூரி என்ற பெயர்களிலேயே கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. மகதா டிஎஸ் பல்கலைக்கழகம் (Magadha DS University) என்ற பெயரில் எந்த பல்கலைக்கழகமும் இல்லை. இதே போன்று மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாணக்கியாவின் உருவத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளது குறித்த தகவல்களும் எங்கும் காணப்படவில்லை.



இதைத் தொடர்ந்து, பரவி வரும் 3D உருவம் குறித்து தேடியதில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு artstation.com என்ற இணையதளத்தில் அங்கூர் காத்ரி (Ankur Khatri) என்பவரின் சுயவிவரத்தின் கீழ் பரவி வரும் இதே புகைப்படம் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தது. அங்கூர் காத்ரி ஒரு டிஜிட்டல் சிற்ப மாடலிங் கலைஞர் என்பதையும், இவர் 3ds Max, Keyshot, Maya, Mudbox, Photoshop, Substance 3D Painter, Zbrush, 3d Coat போன்ற Software-களில் அனுபவம் உள்ளவர் என்பதையும் அவருடைய சுயவிவரத்தின் மூலம் அறிய முடிந்தது.



மேலும் பரவி வரும் புகைப்படத்தின் அருகில், "வணக்கம் நண்பர்களே, தோனியைப் பற்றி நான் ஒரு ஆய்வு செய்கிறேன், உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தலைமுடி இன்னும் வடிவமைக்கப்படவில்லை. இது பாதியிலேயே உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இது தோனியின் உருவம் தான் என்பது தெளிவாகிறது.



மேலும் அவர் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த தோனியின் உருவத்தை தற்போது முழுமையாக தலைமுடியுடன் வடிவமைத்து, அதே (artstation) இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார். தோனியைப் போன்றே பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் ஹிருத்திக் ரோஷன் போன்ற பலரின் 3D உருவத்தை அவர் வடிவமைத்துள்ளதையும் காண முடிகிறது.



இதே போன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதே போன்று பல 3D உருவங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் பழைய புகைப்படம்!

மேலும் படிக்க: தோனியை போல் ரோஹித் சர்மாவும் பகவத் கீதையுடன் இருப்பதாகப் பரப்பப்படும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சாணக்கியாவின் உருவத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளதாகவும், அது கிரிக்கெட் வீரர் தோனியின் உருவத்தை ஒத்திருப்பதாகவும் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க