YouTurn

ஃபர்மான் கானின் கைது குறித்து இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பும் பாஜகவை சேர்ந்த சரவணபிரசாத்!

ஃபர்மான் கானின் கைது குறித்து இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பும் பாஜகவை சேர்ந்த சரவணபிரசாத்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜனவரி 2026-ல் மோனாலிசா போஸ்லே 18 வயதை எட்டியதாலேயே, ஃபர்மான் கானின் கைது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசியல் சட்டம் குரான் மற்றும் பைபிள் அடிப்படையில் செயல்படுவது போன்று, இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வண்ணம் சரவணபிரசாத் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.

பரவிய செய்தி

Breaking: Kerala HC orders not to arrest Farman under POCSO as legally permissible age of marriage in Islam is 9 years.

"Does the Indian Constitution run based on the Quran or the Bible?” 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

POCSO சட்டத்தின் கீழ் ஃபர்மான் கானை கைது செய்ய வேண்டாம், இஸ்லாமில் திருமணத்திற்கு சட்டபூர்வ வயது 9 ஆண்டுகள் என்று கூறி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று பாஜகவை சேர்ந்த சரவணபிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பரப்பி வருகிறார். 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது News 18 Tamil ஊடகத்தில், “கும்பமேளா புகழ் மோனாலிசா கணவரை கைது செய்ய நீதிமன்றம் தடை!” என்ற தலைப்பில் ஏப்ரல் 13, 2026 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. 


அதில் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது மைனர் மகளை கடத்திச் சென்று திருமணம் செய்யப்பட்டதாக  மோனாலிசாவின் தந்தை மத்திய பிரதேச காவல் துறையில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக மத்திய பிரேதச போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்த தப்ப தம்பதி கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையின்போது, கடந்த ஜனவரி மாதமே மோனாலிசா போஸ்லே 18 வயதை பூர்த்தி செய்ததாகவும், பிறப்புச் சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்தே திருமணம் செய்ததாகவும் தம்பதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி Kauser Edappagath, மே மாதம் 20ஆம் தேதி வரை முகமது பர்மான் கானை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, Mathrubhumi ஊடகத்திலும் ஏப்ரல் 13, 2026 அன்று இதே செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் ஜனவரி 2026-ல் மோனாலிசா போஸ்லே 18 வயதை எட்டியதாலேயே, ஃபர்மான் கானின் கைது தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, ஜனவரி 2026-ல் மோனாலிசா போஸ்லே 18 வயதை எட்டியதாலேயே, ஃபர்மான் கானின் கைது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசியல் சட்டம் குரான் மற்றும் பைபிள் அடிப்படையில் செயல்படுவது போன்று, இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வண்ணம் சரவணபிரசாத் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க