YouTurn

மல்யுத்த வீராங்கனை 'சங்கீதா போகத்' 0-10 என்ற கணக்கில் தோல்வி எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

மல்யுத்த வீராங்கனை 'சங்கீதா போகத்' 0-10 என்ற கணக்கில் தோல்வி எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் ஒரு மல்யுத்த போட்டியில் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். ஆனால் ஒலிம்பிக்கில் நேரடியாக நுழைய வேண்டுமாம். மோடிஜி தயவு செய்து இதற்கு ஏதாவது பண்ணுங்கள்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் (Wrestling Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மே 28 அன்று ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான சங்கீதா போகத் ஹங்கேரி நாட்டில் நடந்த போட்டியில் 0-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதில் அவர் நேரடியாக ஒலிம்பிக்கில் வேறு பங்கேற்க வேண்டுமாம். இதனால் தான் தலீத் மற்றும் OBC வீராங்கனைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று கூறி அவர் மைதானத்தில் தோல்வியடைந்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



Archive Link:



உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அவர் ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற மல்யுத்த போட்டியின் முதல் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பேஜ் ரோஜர்ஸிடம் தோல்வியடைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து, ஹிந்துஸ்தான் ஹப் இணையதளத்தில், "சங்கீதா போகத்தின் உள்ளே இருக்கும் நெருப்பு குறையவில்லை, பதக்கம் வென்று பெண்களுக்கு சிறப்பு செய்தி கொடுத்திருக்கிறார்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.



அதில் "ஹங்கேரியில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த ரேங்கிங் தொடர் நிகழ்வின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒலிம்பிக் அல்லாத 59 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற சங்கீதா போகத் தன்னுடைய திறமை மற்றும் உறுதியின் மூலம் வெற்றி பெற்றார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், "சங்கீதா ஒரு மோசமான தோல்வியுடன் தொடங்கினார், ஆனால் தனது இரண்டாவது போட்டியில் வெற்றியுடன் மீண்டார். அவர் தனது அரையிறுதியில் தோற்றாலும், U-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் ஹங்கேரிய விக்டோரியா போர்சோஸுக்கு எதிராக 6-2 என்ற கணக்கில் போராடி வெண்கல பதக்கத்தை வென்றார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதுகுறித்து, சங்கீதா போகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த ஜூலை 15 அன்று இந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறித்து நன்றி தெரிவித்து தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.



ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற ரேங்க் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் சங்கீதா போகத் விளையாடிய காட்சிகளின் முழு வீடியோ தொகுப்பை United World Wrestling (UWW) இணையதளத்திலும் காணலாம். இதில் 59 கிலோ பெண்களுக்கான மல்யுத்த பிரிவில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றதற்கான முடிவுகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.



மேலும் படிக்க: மல்யுத்த வீரர்கள் கைதுக்கு பின் சிரித்து செல்ஃபி எடுத்ததாக பாஜகவினர் பரப்பிய எடிட் படம்.. வீடியோவில் என்ன பேசினார் ?

இதற்கு முன்பும் மல்யுத்த வீராங்கனைகள் குறித்து ஊடகங்களில் தவறாக செய்திகள் பரப்பப்பட்டன. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: மல்யுத்த வீராங்கனைகள் பற்றி குஷ்பு பேசியதாகப் பரவும் தினமலரின் போலி நியூஸ் கார்டு‌.. அதையே பகிர்ந்து விமர்சித்த குஷ்பு !

முடிவு:

நம் தேடலில், ஹங்கேரி நாட்டில் நடந்த மல்யுத்த போட்டியில் சங்கீதா போகத் தோல்வி அடைந்துவிட்டு, ஒலிம்பிக்கில் நேரடியாக நுழைய ஆசைப்படுகிறார் எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. அவர் தோல்வி அடைந்தது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம், முதல் போட்டியில் மட்டுமே, அந்த தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க