யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் நடந்து வந்து கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய நாட்டு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் அங்கேயே நின்று மரியாதை செலுத்துகிறார். இந்நிலையில் வீடியோவை எடிட் செய்து, அவர் இந்திய தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்துவது போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நிகழ்ச்சி ஒன்றில் புதின் நடத்து வரும் போது, திடீரென இந்திய தேசிய கீதம் ஓலிக்கிறது. அப்போது அந்த இடத்திலேயே நின்று மரியாதை செலுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
புடினின் செயலுக்கு தலைவணங்கி வாழ்த்து சொல்லத்தான் வேண்டும் 👌#ThankYou_pudin pic.twitter.com/rZYGzi5EUw
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Елена Штульман என்ற யூடியூப் பக்கத்தில், பிப்ரவரி 1, 2012 அன்று அந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 1:30 நிமிடத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதே போல் அந்த வீடியோவில் இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக, வேறு ஒரு இசை ஒலித்ததையும் பார்க்கமுடிந்தது.
இதையடுத்து அந்த வீடியோவில் உள்ள இசை குறித்து தேடினோம். Music is Love Anthems என்ற யூடியூப் பக்கத்தில், ”Russia National Anthem INSTRUMENTAL with lyrics” என்ற தலைப்பில் அந்த பாடல் பதிவாகியிருந்தது. எனவே உண்மையான வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் நடந்து வந்து கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய நாட்டு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் அங்கேயே நின்று மரியாதை செலுத்தியது தெரியவந்தது.
முடிவு:
நம் தேடலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்துவது போன்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான வீடியோவில் ரஷ்ய நாட்டு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் அங்கேயே நின்று மரியாதை செலுத்துவதை பார்க்கமுடிந்தது.
