YouTurn

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது. மேலும் பரப்பப்படும் புகைப்படத்தில் மது பாட்டிலின் நிழல் மட்டும் வலது பக்கமாக விழுந்திருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.

பரவிய செய்தி

அடேய்.... கொத்தடிமைஸ் என்னடா இதெல்லாம் 

image.png

Archived Link

விரிவான விளக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பிப்ரவரி 14 அன்று திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற்றது. இதில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்களுக்காக அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையில் மதுபானம் இடம்பெற்றிருந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன, 

பரவி வரும் புகைப்படத்தை கூர்ந்து கவனிக்கையில், மதுபாட்டில் மட்டும் தனியாக தெரிவது போல் இருந்தது.  மேலும் பரப்பப்படும் புகைப்படத்தில் மது பாட்டிலின் நிழல் மட்டும் வலது பக்கமாக விழுந்திருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. இதையடுத்து இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. 


அதன் அடிப்படையில் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது DMK Updates என்ற எக்ஸ் பக்கத்தில், ”இன்று நடைபெற இருக்கும் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்க உள்ள சிற்றுண்டி தொகுப்பு” என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் அதில் எங்கும் மதுபாட்டில் இடம்பெறவில்லை.


மேலும் இது குறித்து ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்த போதும், இப்படியான எந்த தகவலும் செய்திகளில் வெளியாகவில்லை. இதிலிருந்து பரவி வருவது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது. 


முடிவு: 

எனவே, திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க