
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
EVM, VVPATகளில் யாரும் கைவக்க முடியாது, அவ்வளவு பாதுகாப்பானது
இது EVM வாக்குகள் திருடப்படவில்லை என்றால், யாருடைய மேற்பார்வையும், பாதுகாப்பும் இல்லாமல் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.
➽ பிறகு எப்படி EVMகளை ஹேக் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம்… pic.twitter.com/xQZt42ezio
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) January 11, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022 லிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Landslide Victory In Gujarat.
Scene From One Of The Strong Rooms In That State
Bhavnagar Constituency. pic.twitter.com/GO1Q27DVk3
— Shenaz (@WeThePeople3009) December 13, 2022
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, VVPAT-களில் இருந்து VVPAT சீட்டுகளை அகற்றுவதற்கான விவரங்கள் மற்றும் வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் (EVM) பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பன பற்றிய தகவல்களை குறிப்பிட்டிருந்தனர்.

ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றியே, அந்த இளைஞர்கள் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்களில் (EVM) இருந்து காகிதங்களை அகற்றியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
- VVPAT பெட்டியில் இருந்து காகித சீட்டுகள் அகற்றப்படவேண்டும்.
- அந்த காகித சீட்டுகள் அடர்த்தியான கருப்பு காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு காகித உறையில் வைக்கப்படவேண்டும்.
- ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் எடுக்கப்பட்ட சீட்டுகள் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்.
- .அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உறையில் உள்ள விவரங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை 4-வது புகைப்படத்தில் உள்ள கருப்பு நிற உறையில் தெளிவாகக் காணலாம்.

VVPAT பெட்டியில் இருந்து காகித சீட்டுகள் எவ்வாறு அகற்றப்படவேண்டும் என்பது குறித்து ‘கேரள ஸ்கூல் ஐசிடி ஹெல்ப்’ வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவிலும் இதே வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு VVPAT இயந்திரத்தில் இருந்து காகிதச் சீட்டுகளை அகற்றும் வழக்கமான செயல்முறைகளைக் கொண்ட வீடியோவை EVM இயந்திரங்களில் மோசடி நடைபெறுவதாகக் கூறி தவறாகப் பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.