YouTurn

வாஜ்பாயி ஆட்சியில் அன்புமணி அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே சொல்லும் தவறான தகவல்!

வாஜ்பாயி ஆட்சியில் அன்புமணி அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே சொல்லும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் 2004 - 2009 வரையிலான காலத்தில் ‘ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக’ இருந்தார்.

பரவிய செய்தி

"அன்புமணி ராமதாஸ் வாஜ்பாயி தலைமையிலான NDA ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் பெருமைகளை பெற்றார்" - ரங்கராஜ் பாண்டே!


image.png


YouTube Link

விரிவான விளக்கம்

‘Galatta Voice’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாமக கட்சி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் வாஜ்பாயி தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் பெயர் பெற்றார்” என்று ரங்கராஜ் பாண்டே பேசியுள்ளார்.


உண்மை என்ன?


‘அன்புமணி ராமதாஸ்’ மத்திய அமைச்சராக இருந்தது குறித்து தேடுகையில், ‘THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அன்புமணி ராமதாஸ் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் செய்த சாதனைகளை விளக்கி கொண்டுவரப்பட்ட புத்தகம் பற்றி அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



அந்த புத்தகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் 2004 - 2009 வரையிலான காலத்தில் ‘ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக’ அன்புமணி ராமதாஸ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இந்த காலகட்டத்தில்தான் ‘ASHA’ என்று சொல்லப்படக்கூடிய கிராமப்புறத்தில் சமூக சுகாதார ஆர்வலர்களை கொண்டுவரும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.



மேலும் தேடியதில், இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் கூட அன்புமணி ராமதாஸ்  2004 - 2009 காலகட்டத்தில் தான் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு:


அன்புமணி ராமதாஸ் வாஜ்பாயி தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே தவறான தகவலை பேட்டியில் கூறியுள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க