YouTurn

ஜோதிர்மய சங்கராச்சாரியார் பாஜகவினரால் தாக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோ !

ஜோதிர்மய சங்கராச்சாரியார் பாஜகவினரால் தாக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராமர் கோயில் கட்டுமான பணி முடிவடையாமல் மோடி திறந்து வைப்பது தவறு என்று விமர்ச்சித்த ஜோதிர்மய சங்கராச்சாரியார் அவர்கள் பாஜக குண்டர்களால் தாக்கப்படும் காட்சி..

Facebook link 

விரிவான விளக்கம்

னவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற உள்ளது. ஆனால், திறப்பு விழாவை அரசியல் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆன்மீகத் தலைவர்கள் சிலரும் புறக்கணித்து உள்ளனர். கோயில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், பாஜகவின் அரசியல் காரணத்திற்காக திறப்பு விழா தேர்தலுக்கு முன்பாக நடைபெறுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவில் சங்கராச்சாரியார்கள் பங்கேற்க மாட்டோம் எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ராமர் கோவில் பணிகள் முழுமையடையாமல் திறக்கப்படுவது சாஸ்திரத்திற்கு எதிரானது. எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டேன். இது மோடிக்கு எதிரானது அல்ல எனப் பேசி இருந்த உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியை பாஜக குண்டர்கள் தாக்குவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



X post link



உண்மை என்ன ? 

சங்கராச்சாரியார் தாக்கப்படும் வைரல் வீடியோ குறித்து தேடுகையில், 2015 செப்டம்பர் 23ம் தேதி TV5 நியூஸ் சேனலில் வெளியான வீடியோவில், விநாயகர் சிலையை கரைக்கும் ஊர்வலத்தில் வன்முறை. வாரணாசியில் சுவாமிஜி மற்றும் பக்தர்கள் மீது போலீஸ் தடியடி என இடம்பெற்றுள்ளது. வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள காட்சிகள் இந்த வீடியோவிலும் இடம்பெற்றுள்ளன.



2015ல் நடந்த இச்சம்பவம் குறித்து இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரைகளின்படி, வாரணாசியின் தசாஷ்வமேக் காட் பகுதியில் காசி மராட்டிய விநாயகர் உற்சவ சமிதி கங்கையில் சிலையை கரைப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலத்தை தொடங்கியது. ஆனால், கங்கை மற்றும் யமுனை நதியில் சிலைகளை கரைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி அரசு நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் காயமடைந்த அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் வாகனங்கள் தீயிடப்பட்டது. அங்கு நிகழ்ந்த வன்முறை தொடர்பாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. அகிலேஷ் யாதவ் ஹரித்வார் சென்ற போது சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் மற்றும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியிடம் இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக 2021ல் ஜகரம் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !

மேலும் படிக்க : நேபாளத்திலிருந்து சீதைக்கு வந்துள்ள திருமண சீர்வரிசைகள் எனப் பரவும் தவறான வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், ராமர் கோயில் கட்டுமான பணி முடிவடையாமல் மோடி திறந்து வைப்பது தவறு என்று விமர்சித்த ஜோதிர்மய சங்கராச்சாரியாரை பாஜகவினர் தாக்கியதாகப் பரவும் தகவல் தவறானது. இந்த வீடியோ கடந்த 2015ல் வாரணாசியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க