யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நாள் - பிப்ரவரி 13, 2026. ஆனால் பரவி வரும் வீடியோ கடந்த மாதத்தில் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. மேலும் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
நம்ப #ThalapathyVijay அவர்களை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்களின் காணொளி
இது எல்லாம் திமுக கட்சிக்கு வெறும் கனவுதான்

விரிவான விளக்கம்
சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் பிப்ரவரி 13, 2026 அன்று நடைபெற்றது. அப்போது விஜய்யை பார்ப்பதற்கு வாகனங்கள் அணிவகுத்து வந்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நம்ப #ThalapathyVijay அவர்களை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்களின் காணொளி 🔥🔥🔥🔥🔥
இது எல்லாம் திமுக கட்சிக்கு வெறும் கனவுதான் #TVKForTN #JanaNayagan pic.twitter.com/SwosTNg8Rp
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது shyam_ki_deewani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜனவரி 15, 2026 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. மேலும் அந்த வீடியோவின் Caption-ல் Nirmal Chaudhary என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது பார்க்கமுடிந்தது.
இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்ற பார்த்தபோது, பிப்ரவரி 06, 2026 அன்று அதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. மேலும் அந்த வீடியோவில் ஜெய்ப்பூர், ராஜஸ்தான் என்று குறிப்பிட்டுருந்ததையும் பார்க்கமுடிந்தது. மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் Bioவை பார்த்தப்போது, Student Union President, Rajasthan University, Jaipur என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் அந்த பக்கத்தில் பதிவாகியிருந்த மற்றொரு வீடியோவில், கார் நம்பர் பிளேட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை குறிக்கும் RJ என்று என்று எழுதப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து பரவி வரும் வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்று குறிப்பிட்டு தவறான வீடியோவை பரப்பி வருகின்றனர்.